பக்கம் எண் :

மொழியதிகாரம்133

     

"கோரத்திற் கொப்போ கனவட்டம்"
(தனிப்பாடல்)

     வடவர் எதிர்ப்பு, காப்பு, திரும்பல் ஆகிய பொருள்களைக் குறிக்கும்
குட் (gh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர்.

கோணம் - கோண

     கோண் - கோணம் = வளைவு, மூலை.

கோபுரம் - கோபுர (g)

"புரையுயர் பாகும்"
(தொல். 785)

     

      புரம் = உயரமான கட்டடம், மேன்மாடம். கோ=அரசன், தலைமை.
கோபுரம்=அரசனிருக்கும் மேன்மாடம், தலைமை யான காவற் கொத்தளம்,
அதுபோன்ற கோயிற் கோபுரம்.

     மா. வி. அகரமுதலி, கோபுர என்னும் சொல்லை ஆவைக் குறிக்கும்
கோ என்னும் சொல்லின்கீழ்க் குறிக்கின்றது. முதன்முதற் கோபுரம்
கட்டப்பெற்றது தென்னாட்டிலேயே.

கோளகம் - கோலக = கருமிளகு.

     கோலகம் = நீண்டுருண்ட திப்பிலி.

கோலம் - கோல (g) = உருண்டை.

     கோள்-கோள்-கோளம் = உருண்டை, கோளக்கட்டி (gland).

     கோள் - கோளா = உருண்டைக் கறி.

கோலம் - கோலக (g) = உருண்டை.

     கோளகம் = உருண்ட மிளகு, மண்டல விரியன்.

     கோளகை = 1. வட்ட வடிவம்.

     "அண்டகோளகைப் புறத்ததாய்" (கம்பரா. அகலிகைப். 60). 2. யானைக்கிம்புரி. 3. மண்டலிப்பாம்பு.

சக்கரம் - சக்ர (c) - இ.வே.

     சுழிதல் = வளைதல், திருகுதல்.

     சுழி - சழி. சழிதல் = ஒரு பக்கஞ் சரிதல்.

     சழி-சரி-சருவு. சருவுதல் = சாய்தல். சரி = வளையல் வகை. சருவு-சருகு.

     சருகுதல் = சாய்தல்.

     சருகு-சருக்கு. சருக்குதல் = சாய்தல், வளைதல், சறுக்குதல்.

     சருக்கு-சருக்கம் = வட்டம், நூற்பிரிவு. L. circum = வட்டம்.

     சருக்கு - சருக்கரம் - சக்கரம் = வட்டம், உருளி, குயவன்