பக்கம் எண் :

மொழியதிகாரம்139

     சட்டம் - சடம் = 1. உடம்பு. ஒ.நோ : பட்டம் - படம் = துணி.

     "சடங்கொள் சீவரப் போர்வையர்" (தேவா. 805: 10).

     2. உடம்புபோல் அறிவில்லாப் பொருள் (பிங்.).

சதரம் - சரீர (இ.வே.).

     த - ர, போலி. ஒ. நோ: விதை - விரை.

     வடவருள் ஒருசாரார் ச்ரி என்னும் சொல்லைக் காட்டித் தாங்குவது
என்றும், மற்றொரு சாரார் ச்ரூ என்னுஞ் சொல்லைக் காட்டி எளிதாய்
அழிக்கப்படுவது என்றும், பொருட்காரணங் கூறுவர்.

     சதரம் - சதுரம் = நான்மூலைச் சட்டம்போன்ற நாற்கோணம்.

"வட்டமுஞ் சதுரமும்"
(பெருங். உஞ்சைக். 42 : 29)

     சதுரக்கல், சதுரக்கள்ளி, சதுரத் தூண், சதுரப்பலகை, சரப் பாலை,
சதுர மாடம், சதுரமுகம், சதுரவரம், சதுரவோடு என்பன
தொன்றுதொட்ட வழக்கு.

     வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல்.
ஆயின், வடநூல்களில் ஆளப்பெற்றிருப்பதுபற்றி, சதுரம் என்பதைப்
போன்றே வட்டம் என்பதையும் வடசொல்லென வலிப்பர் வடவர்.
வட்டம் (த.) - வட்ட (பிரா.) - வ்ருத்த (வ.) என்னும் உண்மையான
முறையைத் தலைகீழாய்க் காட்டுவர் அவர்.

     சதுரம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை.

சதுரம் - சதுர் அச்ர = நாற்கோணம்.

     மேலையாரியத்தில் நான்கு என்னும் எண்ணுப்பெயர் முன்னொட்டுப்
பெற்றே சதுரத்தைக் குறிக்கின்றது.

     L.quatuor = four; exquadra - OF. esquarre, E. square.

     வடமொழியில் அது பின்னொட்டுப் பெற்றுக் குறிக்கின்றது. சதுர்
என்னும் பெயர் இயல்பாக நின்று நான்கு என்னும் எண்ணுப்பெயரையே
உணர்த்துகின்றது. சதுரிகா, சதுஷ்க, சதுஷ்டய என்னும் வடிவங்களும் பிற்காலத்திலேயே சதுர வடிவையும் உணர்த்தினதாகத் தெரிகின்றது.

     அச்ர = கோணம், மூலை.

     சதுரம் என்னும் வடிவக் கருத்து நான்மூலைச் சட்டத்தொடு
மட்டுமன்றி, கட்டுடம்பொடும் தொடர்புடையதாகத் தெரிகின்றது.