பக்கம் எண் :

138வடமொழி வரலாறு

"பரியகம் நூபுரம் பாடகஞ் சதங்கை"
(சிலப். 6 : 84, உரை)

சதரம் - சதுரச்ர (c,s)

     சட்டுதல் = தட்டுதல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஆயினும்
சட்டுச்சட்டென்று தட்டுதல் என்னும் வழக்குள்ளது.

     சட்டென்று = சட்டென்று தட்டுமளவில், சட்டென்னும் ஓசை
கேட்குமளவில், விரைந்து.

     சட்டு - சட்டம் = தட்டையான பலகை. ஒரு பொருளைத் தட்டத்
தட்ட மேன்மேலுந் தட்டையாதல் காண்க. இதனால் தட்டற் கருத்தினின்று
தட்டைக் கருத்துத் தோன்றிற்று.

     ஒ.நோ : தட்டு - தட்டம், தட்டை ; பட்டு - பட்டம், பட்டை;
     மொட்டு - மட்டு - மட்டை.

     சட்டம் = 1. பலகை ஓலை முதலிய தட்டையான பொருள். 2.
கொத்தன் சட்டப் பலகை. 3. சட்டப் பலகை போன்ற நேர்மை. 4.
வரியிழுக்குஞ் சட்டம் (flat ruler). 5. நேர்வரி. 6. நேர்வரி போன்ற
ஒழுக்கநெறி, சட்ட திட்டம்.

     7. நாற்புறமுந் தைத்த சட்டம் (frame), நாற்புறச் சட்டமான சதுரம்.

     8. உயிருக்கு அல்லது ஆதனுக்கு (ஆன்மாவிற்கு)ச் சட்டம்
     போன்றிருக்கும் உடம்பு.

     (ஆங்கிலத்திலும் சட்டத்தைக் குறிக்கும் 'frame' என்னுஞ் சொல்
     உடம்பைக் குறித்தல் காண்க.).

     9. கட்டில் முதலியன பின்னுதற்கும் வீடு கட்டுதற்கும் படம்
     வரைதற்கும் அமைத்துக்கொள்ளும் சட்ட அமைப்பு. 10.
     முன்னேற்பாடான திட்டம் (plan).11.அணியம் (ஆயத்தம்).

     12. கட்டுரை முதலியன வரைதற்குக் குறித்துக்கொள்ளும் குறிப்பு.
     13. பார்த்தெழுதுதற்கு வைத்துக்கொள்ளும் மேல்வரி யெழுத்து.
     14 .எதற்கும் அளவையான மேல்வரிச் சட்டம். 15. செப்பம் அல்லது
     சீர்மை.

     சட்டம் - சட்டகம் = 1. சட்டம் (frame).

     "சட்டகம் பொன்னிற் செய்து" (சீவக. 2523).

     2. கட்டில், படுக்கை (திவா.).

     3. வடிவு (பிங்.). 4. உடல்.

     "உயிர்புகுஞ் சட்டகம்" (கல்லா. 8:1.).

     சட்டம் 'சட்டகம்' என்னும் இரு சொற்களும் வடமொழியில் இல்லை.