|
எ-டு
: கல - கலாம், கலகம். கைகலத்தல் = சண்டையிடுதல். பொருதல்
= ஒத்தல், போர் செய்தல். பொரு - போர்
= பொருத்து, சமர்.
இங்ஙனமே
ஒப்பைக் குறிக்கும் சமம் என்னும் சொல்லி னின்றும்
போரைக் குறிக்குஞ் சொற்கள் பிறந்துள்ளன.
சமம்
= போர்.
| "ஒளிறுவா
ளருஞ்சம முருக்கி" |
(புறம்.382)
|
சமம்
- சமர் = போர் (திவா.) ஒ. நோ: களம்-களர்.
சமர்த்தல்
= பொருதல்.
| "சமர்க்க
வல்லாயேல்" |
(விநாயகபு.
74:249)
|
போருக்கு
வலிமை வேண்டுமாதலின், போரென்னும் சொல் வலிமை
அல்லது திறமையையும் உணர்த்தும்.
போர்
= வலிமை. சமர்த்து = திறமை.
சமர்
- சமரம் = போர்.
| "இலங்கையி
லெழுந்த சமரமும்" |
(சிலப்.
26: 238)
|
சமர்
- அமர் = போர். "ஆரமர் ஓட்டலும்" (தொல். 1006).
சமரம்
- அமரம் = போர். தெ. அமரமு.
அமர்த்தல்
= மாறுபடுதல்.
| "பேதைக்
கமர்த்தன கண்" |
(குறள்.
1084)
|
வடமொழியில்
சமர என்னும் வடிவே உள்ளது. சமம், சமர், அமர்,
அமரம் என்னும் வடிவுகள் இல்லை.
வடவர்
ஸமர என்னும் சொல்லை ஸம் +ரு என்று பிரித்து, ஒன்றுகூடு,
மாறுபடு, போர்செய் என்று பொருள் காட்டுவர்.
ஸம்
= கூட. ரூ = சேர்.
சமர்த்து
- ஸமத்த (th)
வடவர்
ஸம் + அர்த்த என்று பகுத்து, ஒத்த அல்லது தகுந்த நோக்கங்
கொள்ளுதல், தகுந்த நிலைமை பெறுதல், வலிமை யடைதல் என்று பொருள்
பொருத்துவர்.
ஸம்
- ஸம. அர்த் = அடை, பெறு.
சமையம்
- ஸமய (அ.வே.).
அம்-அமை.
அமைதல் = பொருந்துதல், நேர்தல், ஏற்படுதல்.
அமை
- அமையம் = நேரும் வேளை, நேரம், வேளை.
| "ஆனதோ
ரமையந் தன்னில்" |
(கந்தபு.
திருக்கல். 72)
|
அமை
- சமை. சமைதல் = 1. அமைதல். 2. பொருந்துதல்.
|