பக்கம் எண் :

142வடமொழி வரலாறு

"என்றிவை சமையச் சொன்னான்"
(கம்பரா. அங்கத. 8)

     3. அணியம் (ஆயத்தம்) ஆதல்.    

"வனஞ்செல் வதற்கே சமைந்தார்கள்"
(கம்பரா. நகர்நீ. 143)

     4. தகுதியாதல். 5. மணவாழ்க்கைக்குத் தகுதியாகப் பூப்படைதல். 6.
     உண்ணத் தகுதியாக வேதல்.

     சமையல் = உணவு வேவித்தல். சமைந்தவள் = பூப்படைந்தவள்.
     சமையம் = நேரம்.

     சமையம் - சமயம் = 1. ஆதன் (ஆன்மா) அல்லது மாந்தன்
     இறைவன் திருவடிகளை அல்லது வீட்டின்பத்தை அடையச்
     சமைவாகும் (தகுதியாகும்) நிலைமை. 2. அந் நிலைமைக்குரிய
     ஒழுக்க நெறி.

     நேரத்தைக் குறிக்குஞ் சொல்வடிவுகளில் மகர ஐகாரமும்,
     மதத்தைக் குறிக்குஞ் சொல்வடிவில் மகரமும், வரல்வேண்டு
     மென வேறுபாடறிக.

     வடமொழியில் மகரமுள்ள வடிவேயுண்டு. அமையம் என்னும்
மூலச் சொல்லும் அங்கில்லை.

     வடவர் ஸமய என்னுஞ் சொல்லை ஸம்+அய என்று பகுத்து, உடன்
வருதல், கூடுதல், இணங்குதல், உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு,
ஒழுங்கு, மரபு, சட்டம், நெறி, மதம் என்று பொருள் வரிசைப் படுத்துவர்.

     ஸம் = கூட. அய = இயக்கம், செலவு, வருகை. இது இய என்னும்
தென்சொற் றிரிபாகும்.

சருக்கம் - ஸர்க (g)

     சருக்கம் = நூற்பிரிவு.

     வடவர் ஸ்ருஜ் என்னும் சொல்லொடு பொருத்திக் காட்டுவர்.
அதற்கு விடு, எறி, வீசு, வெளிவிடு என்ற பொருள்களே உண்டு.

சருக்கரை - சர்க்கரா

     இது முன்னர் விளக்கப்பெற்றது.

    வடமொழியில் சரள், சிறுகல், கூழாங்கல், கற்கண்டு என்று பொருள்
தொடர்பு காட்டுவர்.

சரம் - ஸர

     நீர்ப்பொருள் ஒரு துளையினின்று நேராக விரைந்து ஒழுகுதலை,
சர் என்று பாய்கிறது என்று கூறுவது வழக்கம்.

     ஒழுகல் நீட்சிக் கருத்தை யுணர்த்தும்.