பக்கம் எண் :

144வடமொழி வரலாறு

     வடவர் சூ அல்லது ச்வி என்னும் சொல்லைக் காட்டி,ஊதிப்
போனது என்று பொருட்காரணங் கூறுவர்.

     ச்வி = ஊது, வீங்கு.

சவலை - சபல (c)

     சவளுதல் = வளைதல், துவளுதல்.

     சவள் - சவல் - சவலை = 1. மெலிவு, தாய்ப்பாலில்லாக்
குழந்தையின் மெலிவு. ம. சவல, தெ. த்சவிலெ.

"சவலை மகவோ சிறிதும் அறிந்திடாதே"
(தண்டலை.சத.97)

     2. தாய்ப்பாலின்றி மெலிந்த குழந்தை.

"சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ"
(திருவாச. 50: 5)

     சவலைப்பிள்ளை என்பது உலவழக்கு. 3. உறுதியின்மை.

"சவலை நெஞ்சமே"
(வைராக். சத. 3)

     4. இரண்டாம் அடி குறைந்த அளவியல் வெண்பா.

"அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெம்மை தரும்"



(முதுரை, 4)

    வடவர் கம்ப் என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது குறிக்கும்
பொருள் நடுக்கம்.

     தமிழ்ச்சொற் கில்லாத பல பொருள்களை வடசொல் குறிக் கின்றது.
அவை மீன், காற்று, இதள் (பாதரசம்), கருங்கடுகு, ஒருவகை விரை,
ஒருவகைக் கல், ஒருபேய், திப்பிலி, நாவு, கற்பிலா மனைவி, சாறாயம்,
திருமகள் என்பன.

சவை - சர்வ் (c)

     சப்பு - சவை.

சவை - சபா (bh)

     இது முன்னர்க் காட்டப் பெற்றது.

சளப்பு - ஜ்ல்ப்

     சளப்புதல் = அலப்புதல்.

சன்னம் - தனு

     க., தெ. சன்ன. L. tenuis.