|
"தன்றிரு
நாமத்தைத் தானுஞ் சாத்தியே" (கம்பரா. கடிமண. 49). 3. சந்தனம்
பூசுதல்.
'சாத்தியருளச்
சந்தன முக்கசும்' (S.I.I. III. 187).
சாத்து-சாந்து
= 1. சுண்ணாம்புச் சேறு. 2. அரைத்த சந்தனம்.
"புலர்சாந்தின்
வியன்மார்ப" (புறம்.) 3. சந்தனமரம். ம. சாந்து.
"சாந்துசாய்
தடங்கள்" (கம்பரா. வரைக்காட்சி. 44).
4.
நெற்றிப் பொட்டுப் பசை. க. சாது. 5. எட்பசை.
"வெள்ளெட்
சாந்து" (புறம். 246).
சாந்து-சாந்தம்
= சந்தனம். "சாந்த நறும்புகை" (ஐங். 258).
சாந்து-சந்து
= சந்தன மரம்.
"வேரியுஞ்
சந்தும்" (திருக்கோ. 301).
சந்து
- சந்தனம்.
சாமை - ச்யாமா
சமை
- சாமை. "சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும்"
என்பது பழமொழி.
வடவர்
கரியது என்று பொருட்காரணம் கூறுவர். சாமை
கரிதாயின்மை காண்க.
சாய் - சி (இ.வே.)
சாய்தல்
= படுத்தல்.
"திருக்கையிலே
சாயு மித்தனை" (ஈடு, 2 : 7 : 5).
சாய்கை
= படுக்கை.
வ.
சய = படுக்கை, தூக்கம். சயன = படுக்கை, தூக்கம்.
சாயுங்காலம் -
சாயம் (ஸ) - இ.வே.
கதிரவன்
சாயுங்காலத்தைப் பொழுது சாய்கிற வேளை என்பது
இன்றும் பெருவழக்கான உலக வழக்கு.
ஆங்கிலரும்
decline என்று கூறுதல் காண்க.
சாயுங்காலம்
- சாயங்காலம் - சாய்ங்காலம். இது வெளிப் படை.
வடவர்
ஸோ என்பதை மூலமாகக் காட்டுவர். ஸோ=அழி, கொல்,
முடி. சாயம் - நாள்முடிவு. இங்ஙனம் வடசொல்லாகக் காட்டுவதற்கே,
சாயுங்காலம் என்னும் வடிவைச் சென்னைப் ப. க. க. அகரமுதலியிற்
காட்டாது விட்டிருக்கின்றனர்.
|