பக்கம் எண் :

மொழியதிகாரம்147

சாயை - சாயா (ch) - இ.வே.

     சாய் - சாயை = நிழல். நிழல் சாய்கிறது என்பதே வழக்கு.

     கி.ஸ்கிய = நிழல்.

சாலை - சாலா (அ.வே.)

     சாலுதல் = நிறைதல், கூடுதல். சால் - சாலை = கூடம், பட்டறை,
தொழிலகம், அலுவலகம், அகன்ற பாதை.

சாவி - சப்

     சா - சாவி (பி. வி.). சாவித்தல் = அங்கதம் பாடி அல்லது
சினந்துரைத்துச் சாகப் பண்ணுதல், சாவு குறித்த சொற்களைச் சொல்லித்
திட்டுதல்.

     வாழ்த்து (வாழவை) என்னும் பிறவினைக்கு எதிராகச் சாவி என்னும்
சொல்லே பொருத்தமாயிருத்தல் காண்க. இனி ஒருவன் கடுமையாகத்
திட்டும்போது, சாவிக்கிறான் என்று கூறும் உலக வழக்கையும் நோக்குக.

     சாவி - சாவம் - சாப (வ.).

சாறு - ஸார (இ.வே.)

     தெள் - தெறு - தெற்று = தெளிவு. தெற்றென = தெளிவாக.

     தெறு - தேறு. தேறுதல் = தெளிதல், துணிதல். தெ. தேரு.

     தேறு - தேறல் = தெளிவு, தெளிந்த கள், தேன். தெளிந்த சாறு
     (சாரம்).
"கரும்பினின் றேறலை" (திருவாச.5 : 38).

     தேறு-சேறு= 1. கள். "சேறுபட்ட தசும்பும்" (புறம். 379:18).

     2. தேன். "சேறுபடு மலர்சிந்த" (சீவக. 426).

     3. பாகு. "கரும்பின் றீஞ்சேறு" (பதிற். 75 : 6).

     4. இனிமை. "தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற"
     (நெடுநல். 26). 5. மணிநீரோட்டம். 6. சாறு (சாரம்). "சேறு சேர்கனி"
     (சூளா. சுயம். 66).

     ஒ.நோ : தாறு - சாறு = காய்கனிக் குலை (பிங்.).

     சேறு - சாறு = 1. கள் (பிங்.).

     2. நறுமணப் பண்டங்கள் ஊறின நீர்.
     "சாறுஞ் சேறு நெய்யும் மலரும்" (பரிபா. 6 : 41).

     3.மிளகுநீர்."சாற்றிலே கலந்த சோறு" (அருட்பா. 4, அவாவறு.2).
     க. சாறு, தெ., து. சாரு.

     4. இலை கனி முதலியவற்றின் நீர் (சாரம்).
     "கரும்பூர்ந்த சாறு" (நாலடி. 34). ம., து. சாரு.