பக்கம் எண் :

முன்னுரை15

     ஆயினும், தியூத்தானியத்தை மட்டும் தனிப்பட நோக்கின்,
பொதுவகையில் திரிந்த த - ச - ஹ முறை சிறப்பு வகையில்
மீண்டும் ஹ - ச - த எனத் தலைகீழாக ஒருசில சொற்களில்
மாறியுள்ளதாகத் தெரிகின்றது.

  எ-டு: முதற்கால நிலை - he. heo
இடைக்கால நிலை - se, seo
இக்கால நிலை - the, they

     இங்ஙனம், வேறுபட்ட மொழிகளில் எதிர்வழிப் போக்காகச்
சொற்றிரிபு நிகழ்வதும் இயல்பே. இனி, இத் தலைகீழ்ச் சொற்றிரிபு
இலக்கிய வழக்கிற்கேயுரியது எனலும் ஒன்று.

     (7) தன்மையிடப் பெயர் ஏகார வடியினின்றும், முன்னிலை
யிடப் பெயர் முன்மைச் சுட்டாகிய ஊகார வடியினின்றும், படர்க்கைச்
சுட்டுப் பெயர் சேய்மைச் சுட்டாகிய ஆகார வடியினின்றும்
தோன்றியுள்ளன வென்னும் அடிப்படையுண்மை யுணரின், ஆரிய
மூவிடப் பகரப் பெயர்களின் (pronouns) திரிமுறையை எளிதில்
அறிந்துகொள்ளலாம்.

ஏகு என்னும் வினை

  உ - உய். உய்தல் = செல்லுதல் (த. வி.).
   
  உய்த்தல் = செலுத்துதல் (பி. வி.).
   
  உய்-உயவு = செலவு. உயவுநெய் = வண்டி செல்வதற்கிடும் நெய்.
   
  உய் - இய் - இயவு = 1. செலவு.
   
 
"இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில்"  (சிலப்.11:168)
   
  2. வழி. "இயவிடை வருவோன்"           (மணிமே. 13:16)
   
  இய் - இயல். இயலுதல் = 1. செல்லுதல், நடத்தல்.
   
  "அரிவையொடு மென்மெல வியலி"                (ஐங்.175)
   
  2. நடத்தல், நிகழ்தல், நேர்தல்.
   
  "இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு"                                         (கம்பரா.குகப்.10.)
   
  3. கூடியதாதல். "இயல்வது கரவேல்."           (ஆத்திசூடி)
   
  இயல் (பெ.) = நடத்தை, தன்மை, பொருளின் தன்மையைக்
   
  இயல் - இயற்கை.
   
  இய் - இய - இயங்கு. இயங்குதல் = செல்லுதல், அசைதல்.