இயங்கு - இயக்கு
- இயக்கம் = செலவு, அசைவு. |
|
இய்
- எய் - ஏ - ஏகு. ஏகுதல் = செல்லுதல். ம. ஏகு, தெ. ஏகு (g). |
|
ஒ.நோ : இயல்
- ஏல். போ - போகு. |
|
ஏலுதல் = இயலுதல்
(கூடியதாதல்). |
|
.ஏ
- யா - யாத்திரை = செலவு. யா - ஜா - ஜாத்ரா (இ.). |
|
ஒ.நோ : ஏன்-யான்,
ஏது-யாது, ஏமம்-யாமம், ஏனை-யானை |
ஜா
என்னும் இந்தி வினை இறந்தகாலத்தில் கயா (gaya) என்றே
புடைபெயரும்.
சகரம்
ககரமாவது போல் ஜகரம் 'g' ஆகும். இந்திக்கு மூலமான
சூரசேனியில் ஜா என்னும் இந்தி வினை ஏ அல்லது யா என்றே
வழங்கியிருக்கலாம்.
தியூத்தானியத்தில்
ஜா என்னும் போதல் வினை ga எனத் திரியும்.
OS., OE. gan, OHG. gan, gen, E. go. ஆ ஓவாகத் திரிதல்
தமிழிலுமுண்டு.
எ-டு:
பெரியார்- பெரியோர், ஆம் - ஓம்.
"ஓமோமென
வோங்கிய தோர்சொல்" (திருவாலவா.38:4)
தமிழில்
யகரம் சகரமாகவும் சகரம் ககரமாகவும் திரிதல் போல், திரவிட
மொழிகளிலும் வடநாட்டு மொழிகளிலும் ஆரிய மொழிகளிலும் யகரம்
ஜகரமாகவும் ஜகரம் 'g' ஆகவும் திரிகின்றன.
எ-டு:
நெயவு - நெசவு, செய் - (கெய்) - கை.
யமன் (வ.) - ஜமுடு (தெ.), யோகி (வ.) - ஜோகி (இ.),
யௌவன (வ.)- juvenis (L) ஜா - ga. |
உய்
என்னும் தமிழ்வினை வேத ஆரியத்தில் அய் என்று திரிந்து
வழங்குகின்றது.
அய்
- அயத்தே (ayate, இ.வே. i, 127: 3) = இயங்குகின்றான், செல்கின்றான். |
|
அய
= செலவு, இயக்கம். |
|
அயன
= செலவு (வா.ஸ. XXII, 7), இயக்கம். |
|
அயனம்
= இயக்கம், நடக்கை. சாலை, வழி (இ.வே.III,33:7). |
|
அயத்த,
அயத்தம் = பாதம் (இ.வே. X 28: 10, 11). |
|
இய்
என்னும் தமிழ்வினை ஆரிய மொழிகளில் இ என்று குறுகி
வழங்குகின்றது.
|