பக்கம் எண் :

மொழியதிகாரம்161

சூர்ப்பம் - சூர்ப்ப

     சூர்த்தல் = சுழலுதல். "சூர்த்த நோக்கு" (அக. நி.).

     சூர்ப்பு = 1. சுழற்சி (சங். அக.). 2. கைக்கடகம்.

     "பசும்பூட் சூர்ப்பமை முன்கை" (புறம். 153: 3).

     சூர்ப்பு - சூர்ப்பம் = வளைந்த முறம் (பிங்.).

சூலம் - சூல (இ.வே.)

     உல் = தேங்காயுரிக்கும் கூரிரும்பு.

     உல் - சுல் - சுள். சுள்சுள்ளெனல் = முட்போற் குத்துதல்.

     சுள் - சுர் - சுரி - சுரிகை = உடைவாள்.

     சுல் - சூல் = சூலப்படை. "குலிசங் கதைசூல்" (சேதுபு. தேவிபுர.27).

     சூல் - சூலம். "ஊனக மாமழுச் சூலம் பாடி" (திருவாச.9:17).

சூலி - சூலின்

    சூல் (சூலம்) - சூலி = சூலமேந்தி, சிவன், காளி.

சூலை - சூலா

     சூலுதல் = 1. குத்தல். 2. தோண்டுதல், குடைதல்.

     "நுங்குசூன் றிட்டன்ன" (நாலடி. 44). 3. வளைதல்.

     சூல் - சூலை = குத்தல் குடைச்சலெடுக்கும் அல்லது கைகாலை
     மடக்கும் நோய்.

செடி - ஜடி (gh, ) = செடி.

     செள்-செழி - செடி.செடித்தல் = அடர்தல். செடி = அடர்த்தி.

     "செடிகொள் வான்பொழில் சூழ்" (திருவாச. 29: 5).

     செடி = இலைகிளை யடர்ந்த சிறு நிலைத்திணை வகை.

     . செடி, தெ. செட்டு, க. கிட(g), தெ. செட்டு, . ஜாட் (d) = மரம்.

செட்டி - ச்ரேஷ்டின்

     எழுதல் = உயர்தல். எண்ணுதல் = மேன்மேல் அளவிடுதல். எட்டுதல் = உயர்தல், உயர்ந்து தொடுதல், தொடுமளவு நெருங்குதல்.எட்டிநோக்குதல் = அண்ணாந்து பார்த்தல் (பெருங்.நரவாண. 8.82 ).