|
"புரவிசயன்
சூடந்தரு பாகீரதி" (பாரத. அருச்சுனன். 7).
சூடு
= 1. குடுமி. "கானிறை குஞ்சிச் சூட்டில்" (திருவிளை. யானையெய்.
25). 2. உச்சிக் கொண்டை.
சூடு-சூடை=1.
தலை. "சூடையின் மணி" (கம்பரா.சூளா. 88).
2.
குடுமி. "சூடைவிளங்கு மாமணி" (சேதுபு.சேதுவந்த.15).
சூடு
- சூடிகை = 1. மணிமுடி (பிங்.).2. கோபுரக் கும்பம்.
சூடிகை - சூடிகா (c)
சூடை - சூடா (c)
சூடிகை-சுடிகை = 1. தலையுச்சி (திவா.). 2. மகுடம் (திவா.). 3.
நெற்றிச்சுட்டி (திவா.) 4.மயிர்முடி (திவா.). 5.சூட்டு. "பஃறலைச் சுடிகை
மாசுணம்" (கந்தபு.
திருநாட்டுப் .19).
சூர் - சூர்
சுள்
- சுர் - சூர்
சூர்
= 1. மிளகு. 2. கடுப்பு. "சூர்நறா வேந்தினாள்" (பரிபா.7:62).
3.
கொடுமை. "சூரர மகளி ராடுஞ் சோலை" (திருமுருகு.41).
4.
அச்சம். "சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலார்" (பெருங்.
உஞ்சைக். 44).
5. அஞ்சத்தக்க பேய்த்தெய்வம். "உருமுஞ் சூரும்"
(குறிஞ்சிப். 355).
6.
மறம் (வீரம்). 7. வயவன் (வீரன்)."சூர்புக லரியது" (கம்பரா. கவந்த. 21).
சூர்த்தல்
= 1. அச்சுறுத்தல்.
| "சூர்த்துக்
கடைசிவந்த சுடுநோக்கு" |
(சிலப்.5:
84)
|
2.
"கொடுமை செய்தல்" (திருமுருகு. 48, உரை).
சூரன் - சூர (இ.வே.)
சூர்
- சூரன் = வயவன் (பிங்.).
| "துறப்பில
ரறமெனல் சூர ராவதே" |
(கம்பரா.
தைலமாட்டு. 30)
|
சூரன் - ஸூர (இ.வே.)
சுள்
- சுர் - சுரம் - சுரன் - சூரன்.
சூரன்
= 1. நெருப்பு (பிங்.). 2.கதிரவன்.
| "காதற்
சூரனை யனைய" |
(பாரத.பதினேழாம்.49) |
|