|
சுவண்டையாய்த்
தின்னத் திரிகிறான் என்னும் உலக வழக்கைக் காண்க.
மா.வி.அ.பொருந்தப்
பொய்த்தல் முறையில் ஸு +அத் என்பது மூலமாயிருக்கலாம் என்னும். ஸு = நன்றாய்.
அத் = உண்.
சுழிமுனை - ஸு ஷு
ம்னா
சுழிமுனை
(திருப்பு. 732) = பதினாடியுள் இடைக்கும் பின் கலைக்கும் இடையிலுள்ளது.
சுள் - க்ஷு ல்ல
= சிறு.
சுள்
- சிறுமை (இலக். அக.). சுள்ளாணி = சிறிய ஆணி.
(மலைபடு.
27, உரை).
சுள்ளல்
= மென்மை, மெலிவு. சுள் - சுள்ளி = சிறுமை.
| "சுள்ளி
வெள்ளிப் பற்கொண்டும்" |
(கம்பரா.
முதற்போ. 139)
|
சுள் - சுஷ் = உலர்.
இது
முன்னரே விளக்கப்பெற்றது.
சுறுக்கு - ஸ்ராக்
சுறுக்கு
= விரைவு. சுறுக்காய் = விரைவாய்.
சூடம் - சூட (c)
சூடுதல்
= 1. தலையிலணிதல்.
| "கோட்டுப்பூச்
சூடினுங் காயும்" |
(குறள்.
1313)
|
2.
முடியணிதல்.
| "முடிசூடு
முடியொன்றே" |
(கலிங்.525)
|
3.
மேற்கவிதல்.
| "வானஞ்
சூடிய மலர்தலை யுலகத்து" |
(பெரும்பாண்.
409)
|
சூடு
- சூட்டு = 1. நெற்றிப்பட்டம
| "செம்பொற்
சூட்டொடு கண்ணி" |
(சீவக.2569)
|
2.
பறவையின் உச்சிக்கொண்டை.
| "காட்டுக்
கோழிச் சூட்டுத்தலைச் சேவல்" |
(பெருங்.உஞ்சைக். 52:62)
|
3.
மதில்மேல் ஏவறை.
"இடுசூட்
டிஞ்சியின்” (பு.வெ.6 : 18, கொளு).
சூடு
- சூடம் = தலையின் உச்சி.
|