பக்கம் எண் :

158வடமொழி வரலாறு

சுல்லி - சுல்ல (c) = அடுப்பு.

     சுல் = சுள். சுல் - சுல்லி = 1. அடுப்பு (திவா.). 2. மடைப்பள்ளி
(இலக். அக.).

சுவணம் - ஸு பர்ண

     உ - உவண் = மேலிடம்(சீவக.2853). உவணை = தேவருலகம்.
"ஆகநீத் துவணைமே லுறைந்தான்" (சேதுபு. விதூம.54). உவண்
- உவணம் = 1. உயர்ச்சி (திவா.).

     2. கலுழன் (கருடன்).

     "சிறையுவண மூர்ந்தாய்" (திவ்.இயற்: 1: 22).

     3. கழுகு (திவா.).

     கலுழனுங் கழுகும் உயரப் பறக்கும் பருந்தினத்தைச் சேர்ந்தன
வாதலின், அப் பெயர் பெற்றன.

     "உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?"என்னும்
பழமொழியை நோக்குக.

     உவணமுயர்த்தோன் = கலுழக் கொடியனாகிய திருமால்.

     உவணர் = கலுழர்.

     "உவணரோ டியக்கர்" (கந்தபு. அயனைச் சிறை நீ. 2).

     உவணவூர்தி = "கலுழனை ஊர்தியாகக் கொண்ட திருமால்"
     (தணிகைப்பு. அகத். 370).

     உவணன் = கலுழன் (திவா.). உவணம் - சுவணம் = கலுழன்
     (சங். அக.).

     ஒ.நோ : உதை - சுதை, உருள் - சுருள், உழல் - சுழல்.

     வடவர் சுவணம் என்பதை ஸுபர்ண என்று திரித்தும், ஸு+பர்ண
என்று பிரித்தும், அழகிய இலை, அழகிய இலை யுடையது, இலை
போன்ற அழகிய சிறகுகளையுடையது, பெரும் பறவை, கலுழன் என்று
பொருள் விரித்தும், தம் ஏமாற்றுத் திறத்தின் பேரெல்லையைக்
காட்டியுள்ளனர்.

     ஸு = நல்ல. பர்ண = இலை.

சுவண்டை - ஸ்வத் (இ.வே.)

     சுவை - சுவடு = சுவை, இனிமை

"அடிமையிற் சுவடறிந்த"
(ஈடு, 2: 6: 5)

     சுவடு - சுவண்டு - சுவண்டை = சுவை, இன்சுவை.