பக்கம் எண் :

மொழியதிகாரம்157

     சுரம் என்னும் சொல் முதுவேனிற் காலத்திற் கடுமையாய்ச் சுடும்
பாலைநிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டமையால், சுரநோயைக்
காய்ச்சல் என்றே சொல்ல வேண்டும்.

     ஜ்வர என்னும் சொல் காய்ச்சலை மட்டுங் குறிக்கும்; பாலை
நிலத்தைக் குறிக்காது.

சுரிகை - சுரிகா (ch)

     சுர்-சுருக்கு. சுறுக்கெனல்=குத்துதற்குறிப்பு. சுர் - சுரி.சுரித்தல் =
துளைத்தல்.

     சுரி - சுரிகை = 1. உடைவாள்.

"சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை"
(பெரும்பாண். 73)

     
     2. கத்தி.

     வடமொழியில் சுரிகா என்பதன் அடி 'சுர்'. ஆயின், மா.வி. அ.
க்ஷு ர் என்பதை மூலமாகக் காட்டும். இவை யிரண்டும் சுரி என்பதன்
திரிபே.

     சுரி - சூரி = ஓலையில் துளையிடுங் கருவி, சுரிகை.

     ம., க., து. சூரி, தெ. த்சூரி.

     சூரிக்கத்தி = சூரியுள்ள கத்தி. க. சூரிக்கத்தி, தெ. த்சூரிக்கத்தி.

     சூரி என்பது உலக வழக்கு; சுரிகை என்பது செய்யுள் வழக்கு.

     ஏட்டில் துளையிடுங் கருவியைச் சுரியூசி என்பது யாழ்ப்பாண வழக்கு.

சுருங்கை - ஸு ருங்கா

     சுருங்குதல்=ஒடுங்குதல். சுருங்கு=(ஒடுங்கிய) சாய்கடை(பிங்.). இனி,
உட்டுளையான வழி என்றுமாம்.

     சுருங்கு - சுருங்கை = 1.நுழைவாயில் (பிங்.). 2. சிறுசாளரம்.

"மாடமேற் சுருங்கையி லிருந்து" (சீகாளத்.பு. நக்கீர. 30).

     3. நீர் செல்லுங் கரந்துபடை.

     5. தப்பியோடும் கீழ்நில நெடுவழி.

     கீழ்நில வழியைக் குறிக்கும்போது, சுரங்கம் என்பது உலக வழக்கு.