பக்கம் எண் :

156வடமொழி வரலாறு

     பிடரி, குதிரையின் பிடரிமயிர், உயர்ந்த மேடு. "வேங்கைச்
செஞ்சுவல்" (புறம். 120).

     வடமொழியிற் க்ஷம் என்னுஞ் சொற்கு மூலமில்லை.

சுர - ஸ்ரு (இ.வே.)

     சுரத்தல் = ஊறுதல், ஒழுகுதல், சொரிதல்.

     சுள் - சுர் - சுரி. சுரித்தல் = துளைத்தல். சுரி = துளை.

     சுரை=உட்டுளை. சுர்+சுர: சுரத்தல் = உள்ளிருந்தொழுகுதல்.

     சுள் - சுன் - சுனை = ஊற்று, ஊற்று நீர்நிலை.

     சுரப்பு - ஊற்று.

சுரங்கம் - ஸுரங்கா

     சுர்-(சுரங்கு) - சுரங்கம். ஒ.நோ : அர் - அரங்கு - அரங்கம்.

     சுரங்கம் = பாறையுடைக்க வெடிமருந்து வைக்கும் குழி,
கள்வரிடுங் கன்னம், கீழ்நிலவழி, குடைவரைப் பாதை (tunnel).

சுரப்பி - ஸுரபி (bh)

     சுர - சுரப்பு - சுரப்பி = பால் மிகுதியாய்ச் சுரக்கும் ஆவு
குடஞ்சுட்டு.

சுரப்பு = பால் சுரத்தல்.

     சுரப்பி - சுரபி.

     வடவர் ஸு + ரப் (bh) எனப் பகுத்து, 'இனிதாய்த் தாக்குதல்'
("affecting pleasantly") என்று வேர்ப்பொரு ளுரைப்பர். இருக்கு
வேதத்தில், நறுமணங் கமழ்தல், வசியஞ் செய்தல், இன்புறுத்தல்,
அழகாயிருத்தல் என்னும் பொருள்களிலேயே சுரபி என்னும் சொல்
ஆளப் பெற்றிருப்பதாகவும், பிற்கால வடநூல்களிலேயே அது காமதேனு
என்னும் ஒரு கற்பனை ஆவைக் குறித்தாகவும், மா.வி. அகரமுதலியினின்று
அறியக் கிடக்கின்றது. ஸு = நன்றாய். ர = பற்று, தழுவு.

சுரம் - ஜ்வர

     கள் - சுர் - சுரம் = காய்ச்சல், சுடும் பாலைநிலம்

"சுரமென மொழியினும்" (தொல்.பொருள்.216)
   
"பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங்
கானல்"

(தனிப்பாடல்)
   
"அடிதாங்கு மளவின்றி யழலன்ன
வெம்மையாற்
கடியவே கனங்குழாய் காடென்றார்"


(கலித்.10)

     என்பவை பாலைநில வெம்மையை யுணர்த்தும்.