பக்கம் எண் :

மொழியதிகாரம்163

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"



(சிலப். 11:19-22)

     என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க.

     அக்காலத்தில் பாண்டியக் குடியினர் சிலர் வடநாடு சென்று
வாழ்ந்திருந்தனர். அவரே பாண்டவரின் முன்னோரான வடநாட்டுத்
திங்கள் மரபினர். அதன்பின், சோழக் குடியினர் சிலரும் வடநாடு சென்று
ஆண்டனர். அவரே இராமனின் முன்னோரான வடநாட்டுக் கதிரவன்
மரபினர். இதனாலேயே, மனு, மாந்தாதா, முசுகுந்தன், செம்பி முதலியோர்,
சோழருக்கும் வடநாட்டுக் கதிரவக் குலத்தினருக்கும் பொது முன்னோராகச்
சொல்லப்படுவாராயினர். செம்பி வழிவந்தவன் செம்பியன். செம்பி என்னும்
பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது.

     செம்பியன் = சோழன். "செம்பியர் மருகன்" (புறம். 228: 9).

     சாழன் செம்பியன் எனப் பெற்றமையாலும், செம்பியன் தமிழப்
பேரரையன்,செம்பியன் தமிழவேள் என்பன சோழராற் கொடுக்கப் பெற்று
வந்த பட்டங்களா யிருந்தமையாலும், செம்பி என்னும் பெயர் தூய
தமிழ்ச் சொல்லாகவே யிருத்தல் வேண்டும். மனு, மாந்தாதா முதலியோரின்
தமிழ்ப் பெயர் மறையுண்டு போயின.

     தலையெழு வள்ளல்களுள் ஒருவன் செம்பியன் எனப்
பெற்றிருந்தமையால், சோழர்குடித் தொன்முது பழைமையும் செம்பியன்
முதுபழைமையும் உணரப்பெறும்.

     ஆரியர் வருமுன் வடநாட்டில் தமிழர் குடியேறியிருந்தது போன்றே,
தமிழ அரசரும் குடியேறியிருந்தனர் என அறிக.

     அகத்தியர் "துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல்
வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி
வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடுகெடுத்து
நாடாக்கிப் பொதியின்கண் இருந்தார்" என்று நச்சினார்க்கினியர்
கூறுவதையும் நோக்குக.

செவ்வந்தி - சேவதீ

     செவ்வந்தி = செவ்வந்திநேரத்திற் பூக்கும் பூ. செவ்வந்தி- செவந்தி.

செவியுறு - ச்ரு. (இ.வே.) = கேள், செவிக்கொள்.