பக்கம் எண் :

164வடமொழி வரலாறு

     ச்ரு என்னும் சிதைசொல்லினின்றே ச்ருதி (கேள்வி, மறை),
ச்ரோத்ரிய, ச்ரவண, ச்ராவண முதலிய சொற்கள் பிறக்கும்.

சே - க்ஷி2 (இ.வே) = தங்கு, வதி.

     சேத்தல் = தங்குதல்

"பைத லொருதலை சேக்கு நாடன்"
(குறுந். 13)
 
"கான மஞ்ஞை கணனொடு சேப்ப"
(புறம். 127)

     க்ஷி என்னும் சொல்லினின்றே க்ஷேத்ர என்னும் சொல் திரியும்.

     க்ஷேத்ர = தங்குமிடம், மனை, நகர், இடம், திருவிடம்.

     சேக்கை = 1. கூடு. "சேக்கை மரனொழியச் சேணீங்கு புள்"
     (நாலடி. 30). 2. கட்டில்.

     சேத்தல் = தங்கியுறங்குதல்.

"கயலார் நாரை போர்விற் சேக்கும்"
(புறம்.24:20)

சேம்பு - கேமுக

     சேம்பு = ஒருவகைக் கிழங்கு.

 "சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை"
(குறுந். 76)

சேமம் - க்ஷேம

     இது முன்னரே விளக்கப் பெற்றது.

சேரலம் - கேரல

     சேரல் = சேரன். சேரல் - சேரலம் - வ. கேரல - கேரள.

சேலை - சேல (c)

     சீரை - சீலை - சேலை (பிங்.).

     வடவர் சில் (c) என்றொரு செயற்கை மூலத்தை அமைத்துக்
கொண்டு ஆடையணிதல் என்று பொருள் கூறுவர்.

சொம்1 - ஸ்வ (இ.வே.)

     சும்மை = தொகுதி, கூட்டம்.

     சும் - சொம் - (சொந்து) - சொந்தம் = தன்னொடு கூடியது.

சொம்2 - ஸ்வ - ஸ்வாம் (இ.வே.)

     சும் - சும்மை = தொகுதி, செல்வத்தொகுதி.

     சும் - சொம் = சொத்து. முதுசொம் = முன்னோர் தேட்டு.