பக்கம் எண் :

22வடமொழி வரலாறு

"வடமொழி யாட்டி மறைமுறை யெய்தி"  (மணிமே.13:73)

     ஆரியம், வடமொழி என்னும் இரண்டும் ஒருபொருட் சொற்களாகவே
தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்திருக்கின்றன.

"வடமொழி வாசகம் செய்தநல் லேடு"     (சிலப். 15:58)
 
"ஆரியம் முதலிய பதினெண் பாடையின்" (கம்பரா.பம்பா.14)

     ஆரியன் என்னும் சொற்கு உழவன் என்று பொருள்கொண்டு யச
என்னும் இலத்தீன் சொல்லை மூலமாகக் காட்டினர் மாக்கசு முல்லர்.
உழவுத்தொழிலில் முதன்முதற் சிறந்தவர் தமிழராதலாலும், யச என்னும்
இலத்தீன் சொல்லும் நயச என்னும் ஆங்கில சாகசனியச் சொல்லும் ஏர்
என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாத லாலும், வேத ஆரியர் ஆடுமாடு
மேய்க்கும் முல்லை நாகரிக நிலையிலிருந்தமையாலும், "ஆரியர் மிலேச்சர்"
என்று திவாகரம் கூறுதலானும், உயர்நாகரிகத்திற்கு அடிப்படையான உழவுத்
தொழிலர்க்கு அநாகரிகர் (மிலேச்சர்) என்னும் பெயர் பொருந் தாமையானும்,
கி.பி.2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மனுதரும சாத்திரத்திலும், "சிலர்
பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப்
பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய
கலப்பையும் மண்வெட்டியும் பூமியை யும் பூமியிலுண்டான பலபல
ஜெந்துக்களையும் வெட்டுகிறதல் லவா?" (இராமநுஜாசாரியர் மொழிபெயர்ப்பு) என்று கூறியிருத்த லானும், ஏரைக் குறிக்குஞ் சொல்
இந்திய ஆரியத்திலின்மையாலும், ஆரியன் என்னும் பெயர் முதன்முதல்
வேத ஆரியனுக்கே ஏற்பட்டதாகத் தெரிதலானும் அவர் கூற்றுப்
பொருந்தாது.

     வேத ஆரியர்க்கு இனமானவரும், செந்து (Zend) பழம்பாரசீகம்
(Old Persian) ஆகிய ஆரிய மொழிகளைப் பேசினவரும், வேத ஆரியர்
போன்றே நெருப்பு வழிபாட்டினருமாகிய, பழம்பாரசீக ஆரியர் இந்திய
ஆரியரினின்று பிரிந்து போனவரே யாதலாலும், ஆரியன் என்னும் பெயர்
இந்தியாவிலேயே ஏற்பட்டுவிட்டமையாலும், அச் சொல்லிற்கு வேத
மொழியிலேயே கரணியங் காணுதல் வேண்டும்.

     ஒரு நாட்டினத்திற்கு அல்லது மக்களினத்திற்கு நாடு அல்லது இடம்,
மொழி, நிறம், தொழில், சிறப்பியல்பு முதலியவற்றாற் பெயர் தோன்றும்.
அப் பெயர் ஓர் இனத்தார்க்குப் பிறரால் இடப்பெற லாம்; அல்லது அவ்
வினத்தாரே தமக்கு இட்டுக்கொள்ளலாம்.

     வேதஆரியர் வெண்ணிறமா யிருந்ததினாலும், எடுப்போசை யும்
மூச்சொலியும் மிக்க முன்னோர் மொழியைக் கொண்டிருந்த