தினாலும், அவையில்லாத
வடநாட்டுத் திரவிடரையும் தென் னாட்டுத்
தமிழரையும் ஏமாற்றி, தாமே தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றும் தம்
முன்னோர் மொழியையும் அதனொடு வடதிரவிடங் கலந்த
வேதமொழியையும் தேவமொழி (தேவபாஷா) என்றும் சொல்லிக்கொண்டது
போன்றே, ஆரியன் என்னும் பெயரையும் தமக்கு இட்டுக்கொண்டனர்.
முதன் முதலாகத் தென்னாட்டிற்கு வந்த பிராமணரும் வெண் ணிறத்தாரே
என்பது,
"நித்திலப்
பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் |
|
தண்கதிர்
மதியத் தன்ன மேனியன்
|
|
ஒண்கதிர்
நித்திலம் பூணொடு புனைந்து
|
|
வெண்ணிறத்
தாமரை அறுகை நந்தியென்
|
|
றின்னவை
முடித்த நன்னிறச் சென்னியன் |
|
............................................................................ |
|
முத்தீ
வாழ்க்கை முறைமையின் வழாஅ
|
|
வேத
முதல்வன் வேள்விக் கருவியொ(டு)
|
|
ஆதிப்
பூதத் ததிபதிக் கடவுளும்" (சிலப். 22: 16-35) |
என்னும் பிராமணப்பூத
வண்ணனையினின்று அறிந்துகொள்க.
"அகத்தெழு
வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே" (தொல்.102) |
என்பது ஆரிய மூச்சொலி
மிகவைக் குறிக்கும்.
மானியர்
வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலியில், ஆரிய
(ஆர்ய) என்னுஞ் சொற்கு,
"a respectable
or honourable or faithful man" |
என்று பொருள் கூறி,
அர்ய என்பது மூலமாகக் காட்டப் பட்டுள்ளது. அர்ய
என்னுஞ் சொற்கு,
"kind, favourable,
R.V; attached to, true, devoted,
dear, R V; exccllent,L." |
என்று பொருளும் ஆட்சி
நூலுங் குறிக்கப்பட்டுள்ளன. அர்ய என்பதற்கு ரு
என்பதை வேராகக் காட்டுவது எத்துணையும் பொருந்தாது.
அருமை
என்னும் தமிழ்ச்சொற்கு எளிதாய்க் கிடையாமை, பெருமை,
மேன்மை என்பவற்றொடு பேரன்பிற்குரிமை (endearment) என்பதும்
பொருளாயிருத்தல் கவனிக்கத்தக்கது.
இச்
சொல்லின் முதனிலையான அரு என்பது ஆரி என்றுந் திரியும்.
|