ஆரி
= |
1.
அருமை. "ஆரிப்படுகர்" (மலைபடு. 161)
2. மேன்மை. "ஆரி யாகவஞ் சாந்தந் தளித்தபின்"
(சீவக. 129)
3. அழகு (சூடா.). |
ஆரி
என்னுஞ் சொல் அன்னீறு பெற்று ஆரியன் (மேலோன்,
உயர்ந்தோன்) என்றாவது, மிக எளிதும் இயல்புமாகும். இச் சொல்
ஆரியமொழியில் ஆர்ய என்ற வடிவே ஏற்கும்.
ஆயினும்,
சிந்துவெளியிலிருந்த ஆரியனுக்குத் தென்னாட்டுத்
தமிழ்ச்சொல்லால் எங்ஙனம் பெயர் அமைந்திருக்கு மென்று, பலர் ஐயுறலாம்.
ஆரிய வருகைக்கு முன்பும் வடஇந்தியாவில் திரவிடரே பெரும்பாலராய்ப்
பரவியிருந்தனர் என்பதையும், வேதப் பெயரும் வேதப் பிரிவின் பெயரும்
தென்சொற் றிரிபே என்பதையும், இந்தியாவிற்கு வருமுன்னரே வேத
ஆரியரின் முன்னோர் மொழியில் தமிழ்ச்சொற்கள் கலந்திருந்தன
என்பதையும், வேதக் காலத்திலேயே வேத ஆரியர்க்குத் தமிழரொடு
தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதையும் உணர்வார்க்கு, இதில் எள்ளளவும் ஐயத்திற்கிட
மில்லையென்க. வேதப் பெயரும் வேதப் பிரிவின் பெயரும் இலக்கிய வியலில் விளக்கப்பெறும்.
ஆண்டுக் காண்க.
ஒ.நோ
: அரிய = மேலான. Gk. aristos = best noble; isto
(sup. suf.)
கடைக்கழகக்
காலத்துப் பேதை வேந்தரும் அவரைப் பின்பற்றிய
பேதை மாந்தரும் பிராமணரை நிலத்தேவரென்றே நம்பி வணங்கியதால், ஆரியன் என்னும்
சொற்கு அர்ச்சிக்க (வணங்க)ப் படத்தக்கவன் என்று
பொருள் கூறி, அர்ச் என்னும் ஆரியச் சொல் லையும் அதற்கு மூலமாகக்
காட்டுவர் வடமொழியாளர். அர்ச் என்ப திலுள்ள சகரம் ஆர்ய என்பதிலின்மையால்,
அது பொருந்தாது.
இராமன்
சிறந்த அரசனாகவும் திருமாலின் அல்லது இறைவனின்
தோற்றரவாகவும் கருதப் பெற்றதினாலேயே அவனை ஆரியன் என்று
குறித்தனர் புலவர்; அவன் ஆரிய இனத்தினன் என்னுங் கருத்தினா லன்று.
"அஞ்சிலே
யொன்றா றாக ஆரியற் காக வேகி"
"ஆரியன்
உரைப்ப தானான் அனைவரும் அதனைக் கேட்டார்"
|
(கம்பரா.தனியன்).
(கம்பராவீடண.
106)
|
இராமன்
கதிரவக்குல அரசனாதலின், சோழர்குடிக் கிளையினனே. இது
'தமிழர் வரலாறு' என்னும் நூலில் விளக்கப் பெறும்.
ஒரு
மொழிக்கு, அதைப் பேசும் மக்களால், அல்லது அது வழங்கும்
இடத்தினால், அல்லது அது எழுதப் பெற்ற நூலினால்,
|