அல்லது
அதன் எழுத்து வடிவினால், அல்லது அதன் ஒலிச்
சிறப்பியல்பால் பெயர் ஏற்படும். இவற்றுள் முதல் வகையால், ஆரியன்
மொழி ஆரியம் எனப் பெற்றது.
5.
ஆரியர்க்குப் பிறந்தகமின்மை
|
ஆரிய
இனத்தின் பிறந்தகம் எதுவென்று இரு நூற்றாண்டாக
ஆராய்ச்சி நடைபெற்றுவரினும், இன்னும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த
முடிபிற்கு வரமுடியவில்லை. சிலர் காண்டினேவிய மென்றும், சிலர்
செருமனியென்றும், சிலர் காக்கேசிய மலைவாரம் என்றும், சிலர் பாரசீகம்
என்றும், சிலர் நடுவாசியா என்றும், சிலர் காரக்கோர மலைவாரம் என்றும்,
சிலர் சிந்துவெளியென்றும் பலரும் பலவாறு கூறிவருவாராயினர்.
இங்ஙனம்
முரண்பட்ட பல்வேறு கொள்கைகளையும் ஆழ்ந்து
நோக்கின், ஒவ்வொன்றிலும் ஒருசிறிது உண்மையு மிருக்கக் காணலாம்.
ஆரியம்
என்பது ஒரு தனிமொழியையும் ஒரு குறுகிய காலத்தையும்
இடத்தையும் தழுவிய ஒரு தனியினமன்று. கிறித்து விற்கு முன் ஏறத்தாழ
5000 ஆண்டுக் காலத்தையும், இந்தியா முதல் காண்டினேவியம் வரை
பல்லாயிரக்கணக்கான இடப் பரப்பையும் தழுவி, திரவிட நிலையிலிருந்து
கீழையாரிய நிலைவரை திரிந்து, பல்வேறு அரசியல் நாடுகனையும் மக்கட்
கூட்டங்களையும் தோற்றுவித்த, நெடுந்தொடர்த் திரிபினமே ஆரியமாகும்.
திரவிடம்
வடமேற்காகத் தொடர்ந்து சென்று காண்டினேவி யத்தை
முட்டித் திரும்பி, ஐரோப்பாவில் ஆரியமாக மாறியபின், மீண்டும்
தென்கிழக்காக வந்து வடஇந்தியாவில் வேத ஆரியத்தையும்
தென்னிந்தியத் தொடர்பினாற் சமற்கிருதத்தையும் பிறப்பித்திருப்பதால்,
இந்தியாவும் ஐரோப்பாவும் ஆகிய இருகோடிகளும் இவற்றிற்கிடைப்பட்ட
பல இடங்களும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோரளவு ஆரியப் பிறந்தகமாக,
வெவ்வேறு கோணத்தில் நோக்குவார்க்குத் தனித்தனி காட்சியளிக்கின்றன.
இந்துக்குச
(HIndukush) மலைத்தொடருக்கும் காரக்கோர
(Karakorum) மலைத்தொடருக்கும் இடைப்பட்ட மலையடி
வாரமான
வடகோகித்தானமே (Northern Kohistan)
ஆரியரின் பிறந்தகம் என்று
மேலையாரியத்தையும் கீழையாரியத்தையும் ஒப்புநோக்கி யாராய்ந்த மாக்கசு
முல்லர் கூறியுள்ளார். இது பிறர் முடிபினுஞ் சற்றே சிறந்ததன்றி
முழுவுண்மையான தன்று.
அவர்
கூறும் வடகோகித்தானம், கீழையாரியர் இந்தியாவிற்கு வருமுன்
நெடுங்காலந் தங்கியிருந்த இடத்தையே குறிக்குமாதலால்,
|