1. |
ஆயிரக்கணக்கான
முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்களும்
அழிந்தும் அழிக்கப்பட்டும் போனமை.
|
|
|
2. |
இற்றைத்
தமிழ்நூல்களிலெல்லாம் வடசொல்லோ ஆரியக்
கருத்தோ சிறிதும் பெரிதும் கலந்துள்ளமை.
|
|
|
3. |
தமிழர்
குமுகாய (சமுதாய)த் துறையில் பிராமணருக்குக்
கீழ்ப்பட்டிருத்தலும், அதை எதிர்க்கும் தன்மான வுணர்ச்சி
அவருக்கின்மையும்.
|
|
|
4. |
நூற்றிற்
கெண்பதுபேர் எழுத்தறியாதிருப்பதும் பெரும்
பாலார்க்குத் தாய்மொழியுணர்ச்சி யின்மையும். |
|
|
5. |
பிறப்பொடு
தொடர்புபட்ட ஆரியக் குலப்பிரிவினையால்
சின்னபின்னமாய்ச் சிதையுண்டு, நாட்டின வுணர்ச்சியும்
ஒற்றுமையுமின்றி முந்தியல் குக்குலங்கள் போல்
வேறுபட்டிருத்தல்.
|
|
|
6. |
கோயில்
வழிபாடும் இருவகைச் சடங்கும் பெரும்பாலும்
பிராமணப் பூசாரியரால் வடமொழியில் நடத்தப்பட்டு வருதல்.
|
|
|
7. |
தந்நலப்
போலித் தமிழ்ப் புலவர், தலைமைத் தமிழ்ப்
பேராசிரியப் பதவிகளைக் கைப்பற்றித் தமிழாக்க
முயற்சிகளையெல்லாம் தடுத்து வருதல். இதனால் மேனாட்டார்
தமிழின் சிறப்பை அறிதற்கு இதுவரை வாய்ப்பு நேர்ந்ததில்லை.
|
|
|
8. |
தமிழ்நாட்டு
அரசும் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும்
தமிழைப் போற்றாமை. |
|
|
9. |
தமிழ்நாட்டுத்
தலைமைப் பதவிகளைப் பெரும்பாலும்
தமிழரல்லார் தாங்கி வருதல். |