காசு
என்பது பழங்காலத்தில் ஒரு சிறு செப்புக்காசா யிருந்ததாகத்
தெரிகின்றது.
"நெஞ்சே
யுனையோர் காசா மதியேன்" |
(தாயு.உடல்பொய்.72) |
ஒரு
காசிற் பன்னிலொரு பங்கு மதிப்புள்ளது மிகச்
சிறிதாயிருந்திருக்குமாதலின், அக்கம் எனப் பெயர்பெற்றது.
அர்க்க
(arka) என்னும் வடசொற்குச் செம்பு (copper) என்றே.
மானியர் வில்லியம்சு வடமொழியாங்கில அகரமுதலியிற் பொருள்
கூறப்பட்டுள்ளது. ஆயின், செ. ப. க. க. த. அகரமுதலியில் அது அக்கம்
என்னும் தென்சொற்கு மூலமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அக்கம்2
- அக்ஷ
அல் - அள் = கூர்மை (திவா.).
|
|
|
அல்
- அல்கு. அல்குதல் = சுருங்குதல்.
|
|
|
அல்கு
- அஃகு. அஃகுதல்
= 1. குறுகுதல் (நன். 60). |
|
|
2.சுருங்குதல். |
|
|
|
"கற்பக்
கழிமட மஃகும்" |
(நான்மணி.
29).
|
|
|
3.
குவிதல். |
|
|
|
"ஆம்பல்......மீட்டஃகுதலும்"
|
(காஞ்சிப்பு.
திருக்கண். 104)
|
|
|
4.
நுண்ணிதாதல். |
|
|
|
"அஃகி
யகன்ற அறிவென்னாம்" |
(குறள்.
175)
|
|
|
அஃகு
- அக்கு = முட்போன்ற முனைகளுள்ள மணி. (உருத்திராக்கம்). |
|
|
"அக்கை
யணிந்தவர் மெய்யுரை" |
(திருவானைக்.கோச்செங்.4)
|
|
|
அக்கு
- அக்கம் = பெரிய அக்குமணி. |
|
|
'அம்'
பெருமைப்பொருட் பின்னொட்டு. |
|
|
"அப்புக்
கொக்கிற கக்கம்" |
(திருப்பு.416)
|
|
|
அக்கு
என்பதே இயல்பான சொல் வடிவம். முள்ளுண்மை
பற்றி அப் பெயர் தோன்றிற்று. |
|
|
"முண்மணிகள்
காய்க்குமரம் முப்பதுட னெட்டே" |
என்று விருத்தாசலப்
புராணம் கூறுதல் காண்க. கண்டம், கண்டி,
கண்டிகை என்னும் பெயர்களும் அப் பொருள்பற்றித் தோன்றி னவே.
கண்டம் (கள்ளி), கண்டகம் (முள், நீர்முள்ளி), கண்டகி
|