பக்கம் எண் :

68வடமொழி வரலாறு

     இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடை வேளையே
காலவகையில் அந்தி யெனப்பட்டது. காலையில் நிகழ்வது காலையந்தி
யென்றும், மாலையில் நிகழ்வது மாலையந்தி யென்றும் சொல்லப்பெறும்.
     

"காலை யந்தியும் மாலை யந்தியும்" (புறம். 34)

     காலையந்திக்கு முன்னந்தி, வெள்ளந்தியென்றும், மாலை யந்திக்குப் பின்னந்தி, செவ்வந்தியென்றும் பெயருண்டு.

     அந்தியென்னும் பொதுச்சொல் சிறப்பாக ஆளப்பெறும் போது
மாலையந்தியையே குறிக்குமென்பது, அந்திக்கடை, அந்திக் காப்பு,
அந்திமல்லிகை, அந்திவண்ணன், அந்திவேளை முதலிய சொல்வழக்கால்
அறியப்படும்.

     இடவகையில், அந்தி என்பது முத்தெருக்கள் கூடுமிடத்தைக்
குறிக்கும்.
     

"அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்" (சிலப். 14: 213)

     பிற்காலத்தில் அந்தி என்னுஞ் சொல் சகரமெய் முன்னிடப் பெற்றுச்
சந்தி என்றாயிற்று.

     ஒ.நோ : இளை - சிளை, உதை - சுதை, ஏண் - சேண்.

     சந்தி = 1. காலை அல்லது மாலை வழிபாடு.

"சந்தி செயத்தாள் விளக்க" (நள.கலிதொ. 32)

     2. மாலை (சூடா.). 'சந்திக்காப்பு' (உ.வ.).

     அந்திசந்தி = காலை மாலை

     3. முத்தெருக் கூடுமிடம்.

"சதுக்கமுஞ் சந்தியும்"
(திருமுருகு. 225)

        அந்தி அல்லது சந்தி என்னுஞ் சொல் தலைக்கூடுதற்
பொருளில் பண்டையிலக்கியத்தில் அருகியே வழங்கியமையாலும்,
சொற்புணர்ச்சியைக் குறிக்கச் சந்தி என்னும் சொல் வடமொழி யிலேயே
ஆளப் பெறுவதாலும், தமிழ்ப்பற்றுள்ள பெரும்புலவரும் சந்தி என்பது
வடசொல்லென்றே மயங்கி வருகின்றனர். ஆயின், ஆய்ந்து பார்க்குங்கால்,
இதன் தென்சொல் மூலம் வெளிப்படுவது வியக்கத்தக்கதா யிருக்கின்றது.

     இச் சொல் முதலில் தமிழில் வழங்கிய வடிவம் அந்து என்பதே.
அந்துதல்=கூடுதல். அந்து-அந்தி=கூடியது, கூடிய நேரம் அல்லது இடம்.
அந்து - சந்து (முதனிலைத் தொழிற்பெயர்) = 1.