பொருத்து (பிங்.)
2. உடற்பொருத்து (பிங்.), தொடைப்பொருத்து,
இடுப்பு. 3. இரு பகைவர் பொருந்துதல் (ஒப்புரவாதல்). "உயிரனையாய்
சந்துபட வுரைத்தருள்" (பாரத. கிருட்டிணன்றூ. 6), "நடுநின்றாரிருவருக்குஞ்
சந்து சொல்ல" (சிலப். 8 : 101, உரை). 4. பலவழி கூடுமிடம்.
"சந்து நீவி" (மலைபடு. 393).
சந்து
- சந்தை = பல கடைகள் கூடுமிடம்.
|
இனி,
வடவர் காட்டும் வரலாறு வருமாறு: |
ஸம்
+ தா(dh) = ஸந்தா. ஸம் = கூட. தா = வை,
போடு (to place or put) |
ஸந்தா=1.
வி. கூடு, ஒன்றுசேர், புணர், ஒப்புரவாகு முதலியன. |
2. பெ. கூட்டம், சேர்க்கை, புணர்ச்சி, உடன்பாடு, கலவை முதலியன. |
ஸம்
+ தி (dhi) = ஸந்தி = கூட்டமுள்ளது, கூட்டம், கூடுகை,
கூட்டு, இணைப்பு, சேர்க்கை, ஒன்றியம், அவை, உடன்பாடு, அந்தி,
புணர்ச்சி, சொற்புணர்ச்சி முதலியன.
ஸம்
+ த்யா (dhy) = ஸந்த்யா = ஒன்றுசேர்க்கை,
கூட்டம்,
கூடுகை, ஒன்றியம், காலையந்தி, மாலையந்தி முதலியன.
இதினின்று
அறியக் கூடியவை:
(1) |
சந்தி
என்னும் தென்சொல்லும் ஸந்தா என்னும் வடசொல்லும் வெவ்வேறு மூலத்தன. |
|
|
(2)
|
ஸம்
என்னும் வடமொழி முன்னொட்டு கும் என்னும்
தென்சொற்றிரிபு. இது பின்னர் விளக்கப் பெறும். |
|
|
(3)
|
தி
(dhi), த்யா (dhy) என்னும் ஈறுகள் தா (dha)
என்னும்
முதனிலையொடு தொடர்புடையனவல்ல. கன்னி என்பதைக்
கன்யா என்று திரித்தது போல், சந்தி என்பதைச் சந்த்யா
என்று திரித்திருக்கின்றனர். |
|
|
(4) |
சந்தை
என்னும் சொல்லும் பொருளும் வடமொழியில்
இல்லை. |
|
|
(5)
|
சந்தி
என்னும் தென்சொல்லே ஸந்தா என்னும்
வடசொல்லொடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. |
|
|
(6) |
சந்தி
என்னும் தென்சொல் தனிச்சொல்; ஸந்தா என்னும்
வட சொல் கூட்டுச்சொல். |
|
|
(7) |
அந்தித்தல்,
சந்தித்தல் என்னும் வினைகளும் வடமொழியில் இல்லை. |
|