|
அயர் = ஹய்
அயர்தல்
= தளர்தல், கொண்டாடுதல். வடசொற் பொருளும்
இவையே.
அரக்கு - ராக்ஷா
ம.
அரக்கு, க., து. அரகு.
எல்=கதிரவன்
எல்-எர்-எரி=நெருப்பு, சிவப்பு. எர்- எருவை= குருதி, செம்பு,
செம்பருந்து.
எர்-
இர் - இரத்தி = செம்பழ இலந்தை.
இர்
- அர் - அரன், அரக்கு, அரத்தம், அருணம்.
அரக்கு
= இங்குலிகம், சிவப்பு,
அரக்கு
- அரக்கம் = அவலரக்கு (பதிற். 30 : 27).
அரக்காம்பல்,
அரக்குச் சாயம், அரக்கு மஞ்சள் என்பன செந்நிறப்
பொருள்களைக் குறித்தல் காண்க.
அரங்கம்-ரங்க
அர்-அறு. அர் - அரங்கு = 1. அறை. 2. அறை வகுக்கப்பட்ட
பாண்டி (சில்லாக்கு) விளையாட்டுக் கட்டம்.
"கட்டளை
யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்." (நற்.3) |
3.
சூதாட்டுக் கட்டம். 4. நாடக மேடை.
5.
முத்தமிழ்ப் புலவர் தத்தம் திறங்காட்டி ஒப்பம்பெறும் மேடை.
அரங்கு-அரங்கம்-1. நாடக மேடை. 2. சூதாடுமிடம்.
3. படைக்கலம்
பயிலுமிடம். 4. போர்க்களம். 5. ஆற்றிடைக்
குறை. 6. திருவரங்கம்.
காவிரிக்கும்
கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட ஆற்றிடைக் குறை,
திருமால் கோயிலையுடைமையால் திரு என்னும் பெயரைடை பெற்றது.
வடமொழியில்
இச்சொற்கு வேரில்லை. நிறத்தை அல்லது சாயத்தைக்
குறிக்கும் ரஞ்ச் (ranj) என்னுஞ் சொல்லொடு தொடர்பு படுத்தி, தம்
அறியாமையையோ அழுக்காற்றையோ காட்டுவர்.
தமிழிலுள்ள
பொருள்களெல்லாம், அறுக்கப்பட்டது என்பதை
அடிப்படையாகக் கொண்டவையே.
|