|
அம்பு - அம்பு
அம்
- அம்பு = நீர்.
அம்மை-அம்பா
(இ. வே.)
ம.,தெ.,
க. அம்மா. அம்ம - அம்மா - அம்பா (வ.).
OG.
amma, them, ammun, ammun, Gr. amme (nurse),
E. mamma.
அம்பி,
அம்பிஸ் (இ. வே.), அம்பீ (இ. வே.), அம்பிகா
(VS & TS), அம்பாலீ (TS), அம்பாலிகா (VS).
amma
என்னும் வடிவம் செ. ப. க. க. த. அகரமுதலியில்
வடசொற்போற் குறித்திருப்பது தவறாகும். அம்மம் (தாயின் முலை) என்ற
சொல்லினின்றாவது ஆவின்கன்று கதறொலியி னின்றாவது அம்ம என்னும்
சொற் பிறந்திருத்தல் வேண்டும்.
| "அம்ம
முண்ணத் துயிலெழாயே" (திவ். பெரியாழ் 2: 2: 1) |
க.
அம்மி, ம. அம்மிஞ்ஞி.
அமைச்சன் - அமாத்ய
அமை
- அமைச்சு - அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து
அமைப்பவன்.
அமை+சு
= அமைச்சு(தொ.பெ.). ஒ.நோ : விழை - விழைச்சு வடவர்
காட்டும் வரலாறு :
அம
= இது (அ.வே.).அமா (அம என்பதன் கருவி வேற்.)= உடன்
(இ. வே.)
அமாத்
(நீக்க வேற்.) = அண்மையிலிருந்து (இ. வே.)
அமாத்ய
= உடன் வதிவோன், உடன் குடும்பத்தான் (இ.வே.).
2.
(அரசனின்) உடன் கூட்டாளி, அமைச்சன் (ம. பா.).
உடன்
கூட்டாளி என்பது உழையன் என்பதற்கு ஒத்திருப் பினும்,
அம என்னும் அண்மைச் சுட்டுப் பெயரினின்று அமாத்ய என்னுஞ்
சொல்லைத் திரிப்பது பொருந்தாது. பாரதக் காலத்தில் வடவருக்குத் தமிழரொடு மிகுந்த
தொடர்பு ஏற்பட்டுவிட்டதனால், அமைச்சன் என்னும்
தென்சொல் அக்கால வடநூல் வழக்கிற் புகுந்ததென்று கொள்ளுதற்கு
எதுவுந் தடையில்லை.
மேலும், அமை என்னுந் தமிழ்ச்சொல் அண்மைப்
பொருளும் உணர்த்துவது கவனிக்கக் ததக்கது. அமைதல்=நெருங்குதல். "வழையமை சாரல்" (மலைபடு.
181).
|