|
சந்தி
சிரித்தல், சந்தியில் நிற்றல், சந்தி மறித்தல், சந்தியில் விடுதல்
என்று உலக வழக்கிலும், சந்தி மிதித்தல் (திருவிளை. உக்கிர.27),
"சதுக்கமுஞ் சந்தியும்" என்று செய்யுள் வழக்கிலும், ஊன்றியிருத்தல்
காண்க. சந்திக் கோணம் என்பது ஒரு தேருறுப்பு (பெருங். உஞ்சைக்.
58:51).
அந்து,
சந்து என்னும் வினைமுதனிலைகள் இகரவீறு பெற்று
உண்ணி, கொல்லி என்பனபோலச் செய்வான் பெயர்களாகி (Noun of
agency), பின்னர் அஞ்சிக்கை, இரட்டித்தல் என்பனபோல் மீண்டும்
முதனிலைகளாய்ப் புடைபெயர்ந்தன என அறிக.
அந்து
- சந்து. அந்து - அந்தி. சந்து - சந்தி.
அந்தி
- அந்திப்பு. சந்தி - சந்திப்பு.
ஆராய்ச்சியின்மையாலும்
ஏமாளித்தன்மையாலுமே, பல
தென்சொற்கள் வடசொல்லெனத் தமிழராலும் நம்பப்பட்டு வருகின்றன.
தென்சொல்லை வடசொல்லென ஏமாற்றும் வடமொழியாளரைச்
சந்திக்கிழுக்கும் சொற்களுள், சந்தி என்பதும் ஒன்றாம்.
அந்தோ - ஹந்த
(nt) - இ.வே.
அப்பம் - அபூப
(இ.வே.)
ம.
அப்பம், தெ. அப்பமு, க., து. அப்ப.
உப்புதல்
= ஊதுதல், எழும்புதல், பருத்தல்.
உப்பு(உப்பம்)-அப்பம்.
ஊது - ஊத்து = பருக்கை. ஊத்து+
அப்பம் = ஊத்தப்பம்.
அப்பளம் - பர்ப்பட
(t)
தெ.
அப்பளமு, க. அப்பள. ம. பப்படம்.
அப்பளித்தல்
= சமமாகத் தேய்த்தல். அப்பளி - அப்பளம்.
அம்-அப் (இ.வே.)
அம்முதல்
= பொருத்துதல், ஒட்டுதல். அம் = நீர்.
| "அந்தாழ்
சடையார்" |
(வெங்கைக்.
35)
|
அம்பரம் - அம்பர
உம்பர்
= உயர்ச்சி, மேலிடம், வானம், தேவருலகம்.
உம்பர்-உம்பரம்
- அம்பரம். "ஒருமருந்தாங் குருமருந்தை
உம்பரத்திற் கண்டேனே" (வே. சா.).
இதற்கு
வடமொழியில் வேரில்லை.
|