|
மாவரையன்
- மாராயன் - மாராயம்.
| "மாராயம்
பெற்ற நெடுமொழி யானும்" |
(தொல்.
பொருள்.63) |
இந்தியர்க்குள்
வழங்கிவரும் ராய் என்னும் பட்டப் பெயர்.
அரையன் என்பதைத் தழுவியதாகும். ராவ் என்பது அரவன் (அரசன்)
என்பதைத் தழுவியது போலும்!
மாராயம்
என்பது தொல்காப்பியர் காலத்தில் மாவரையம்
என்றே வழங்கியிருத்தல் வேண்டும். பிற்காலத்தில் எழுதினவன்
பழமொழிப்படி ஏட்டைக் கெடுத்ததாகத் தெரிகின்றது.
அரையன்
- வ. ராய. யகரம் பெற்ற இச் சொல்வடிவிற்குத் தமிழில்
தவிர வேறெம்மொழியிலும் விளக்கமின்மை காண்க.
ராஜ
என்னும் சொல்லை ரஜ் என்று குறுக்கி ஆள் (to rule)
என்றும், ஒளிர் (to shine) என்றும், செயற்கை முறையில் வடவர்
பொருள் கற்பிப்பது எள்ளளவும் பொருந்தாது.
இனி,
அத்திரு, அத்து(க)மானி, இலணை, கணவம், சுவலை,
திருமரம், பணை எனப் பல பெயர்கொண்ட அரசமரத்திற்கு, அப்பெயர்
தொன்றுதொட்டு உலக வழக்கில் வழங்கி வருவதும், அச்சொல்லின்
தமிழ்மைக்கு ஒரு சான்றாம்.
ம.
அரசு, க. அரசெ, தெ. ராய்.
நாட்டு
மரங்களுள் அரசமரம் மிக ஓங்கி வளர்வதால், மரவரசு
என்னும் பொருளில் அது அப் பெயர் பெற்றது.
"அத்திபோல்
துளிர்த்து, ஆல்போற் படர்ந்து, அரசுபோ லோங்கி,
அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்"
என்னும் மரபுத் தொடர்மொழியையும் நோக்குக.
அரணம் - சரண
(இ.வே.)
உரத்தல்
= வலிமையாதல். உரம் = வலிமை.
உரம்
- அரம் - அரண் = வலிய காப்பு, காப்பான கோட்டை,
காப்பான காடு. ஒ. நோ: பரம் - பரண்.
அரண்மனை
= காப்பான அரசன் மாளிகை.
அரண்
- அரணம் = காப்பு, அந்தளகம் (கவசம்), கோட்டை
மதில், அடவி.
சரண
என்னும் வடசொற்குச் சார்தல் (to lean on, rest on)
என்று பொருள்படும் சரி என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர்.
அது சார் என்னும் தென்சொல்லின் திரிபாயிருக்கலாம்.
|