பக்கம் எண் :

76வடமொழி வரலாறு

அரணம் - அரண்ய (இ.வே.)

     அரண் = காவற்காடு. அரண் - அரணம் = காடு.

     "காவல்வேல் காவற் காடிவை யரணே" (பிங்.)

     "காடும் எயிலுங் கவசமும் அரணம்" (பிங்.)

     "மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண்

     நவையறு சிறப்பின் நால்வகை யரணே" (திவா.)

     "மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண்

     வகையுறு சிறப்பின் நால்வகை யரணே" (பிங்.)

     வடமொழியார் காட்டும் மூலம் :

     ரு (ச) = சொல். ரு - அரண = தொலைவான, அயலான.

     அரண-அரண்ய = தொலைவான அல்லது அயலான இடம், காடு, அடவி,      பாலை.

அரத்தகம் - அலக்தக, அலக்தகம்

     அர் - அரன் = சிவன். அர் - அரக்கு = செம்மெழுகு.

     அரத்தம் = செந்நீர்.

     இதற்குத் தமிழ்வேர் மேற்காட்டப்பெற்றது.

     வடவர் நிறமூட்டப்பெறு (to be dyed ot coloured) என்னும்
பொருளுள்ள ரஞ்ச் (ranj) அல்லது ரஜ் என்னும் சொல்லை மூலமாகக்
காட்டுவர்.

அரத்தம்2 - அலக்த, அலக்தஸ்

     அரத்தம் = அரக்கு (திவா.) .

அரத்தன் - ரக்த

     அரத்தன் = செவ்வாய் (பிங்.).

     அரத்தம் என்னும் சொற்குத் தமிழில் சிகப்பு, செந்நீர், பவழம்,
செம்பரத்தை, செங்கழுநீர், செங்கடம்பு, செம்பருத்தி, செவ்வாடை (துகில்)
என்னும் பொருள்க ளிருப்பதையும், வடமொழியில் அ+ரக்த என்று
பிரித்துப் பொருந்தா மூலங் காட்டுவதையும், நோக்குக.