|
அரவம் - ரவ (இ.வே.)
அர்
- அரவு. அரவுதல் = ஒலித்தல், அரவஞ் செய்தல்.
| "வண்டரவு
கொன்றை" |
(தேவா.
89 : 3) |
அரவு
- அரவம்.
| "படையியங்
கரவம்" |
(தொல்.
1004) |
வடவர்
ரு என்னும் மூலங்காட்டுவர். அது அர் அல்லது
அரவு என்னும் தென்சொல்லின் சிதைவே.
அரவம்
- ஆரவம் - ஆரவ (வ.) = ஒலி.
| "ஆரவ
மிகுத்தது" |
(பாரத. இரண்டா. 24) |
அரன் - ஹர
அரம்-அரன்=சிவன்
(சேயோன்). அர் - அரம் = சிவப்பு.
பிற்கால
முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கைக் கேற்ப, ஹ்ரு
(அழி) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர் வடவர். அது அரி
என்னும் தென்சொல்லின் திரிபாம்.
சிவன்
ஆரியத் தெய்வமல்லன். அவன் முத்தொழிலையுஞ்
செய்கின்றான் என்பதே தமிழர் கொள்கை.
அரி - ஹ்ரு
அரித்தல்
= அழித்தல்.
அரி-ஹரி
அரி = காட்டிலுள்ள உயிரிகளை யெல்லாம் அழிக்கும் விலங்கு
(சிங்கம்) - (பிங்.)
வடசொன்மூலம்
ஹரி (பச்சை) எனக் காட்டுவர். அது
பொருந்தாமை காண்க.
அருக்கம் - அர்க்க
அருகு
- அருக்கு, அருக்குதல் = அழித்தல்.
| "அரிமுதலோ
ருயிரருக்கி" |
(உபதேசகா.
சிவத்து. 422) |
அருக்கு
= எருக்கு. அருக்கு - அருக்கம்.
எருக்குதல்
= 1. அழித்தல்
"நாடுகெட
வெருக்கி" (பதிற். 83:7). 2. கொல்லுதல் (திவா.).
அருக்கு
- எருக்கு. எருக்கஞ்செடி நஞ்சாதலால் இப் பெயர் பெற்றது.
|