பக்கம் எண் :

78வடமொழி வரலாறு

அருணம் - அருண (இ. வே.)

     அர் - அருணம் = சிவப்பு, சிந்தூரம், செம்மறியாடு.

     அருணம் - அருணன் = எழும் செங்கதிரோன்.

     அருணமணி = மாணிக்கம். அருணமலை = தீப்பிழம்பாய்
நின்றதாகச் சொல்லப்பெறும் மலை. அருணமலை = அண்ணா மலை,
அருணை.

     ஆதித்தரின் தாயாகச் சொல்லப்படும் அதிதியின் பெயரான ரு (Š)
என்னும் சொல்லினின்று, அருண என்னும் பெயர் பிறந்துள்ளதாக வடவர்
கூறுவர். இவ் 'ரு' அர் என்னும் தமிழ் வேரின் திரிபாயிருக்கலாம்.

அருந்து - அத் (இ.வே.)

     L. ed, E. eat.

     ஒ.நோ : மருந்து - மந்து (தெ.). உந்து - உத்து.

அலத்தகம் - அலத்தக

     அலத்தகம் - அரத்தகம். அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.

அலத்தம் - அலக்த

     அலத்தம் - அரத்தம். அலத்தம் = செம்பருத்தி. இவை முன்னர்க்
காட்டப்பெற்றன. எல் (கதிரவன்) - இல் - அல்.

அலப்பு - லப்

     லப் - ரப் (இ.வே.) = அலப்பு.

அவை - சபா (sabhƒ) - இ. வே.

     அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம்.

     அமை=அவை. ஒ.நோ : அம்மை - அவ்வை, குமி - குவி.

     அவையடக்கியல், அவையல்கிளவி என்பன, தொல்காப்பி யர்க்கு
முன்பே தொன்னூல்களில் வழங்கிவந்த இலக்கணக் குறியீடுகளாம்.

"வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே
செவியறி வுறூஉவென அவையும் அன்ன"
(தொல். 1367)
   
"அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்"
(தொல். 925)

அவை - அவையம்.