பக்கம் எண் :

மொழியதிகாரம்79

  
"தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்"
(குறள்.67)

     அவை - சவை. ஒ.நோ : இளை - சிளை, உதை - சுதை.

     சவை - சபா (வ.)

     வடசொல் வடிவிற்குப் பின்வருமாறு மூவேறு வகையில் மூலங்
காட்டுவர்.

     (1). ஸ = ஸஹ (கூட). ஸ - சபா = கூட்டம்.

     (2). பா (bha) = விளங்கு (to shine). ஸபா = விளக்கத்தோடு
        (பிரகாசத்தோடு) கூடியது, அறிஞரவை.

     இப் பொருளிற் பா என்னும் வடசொல் பால் என்னும்
தென்சொல்லொடு தொடர்புடையதா யிருக்கலாம்.

     பால்=வெண்மை. "பாற்றிரு நீற்றெம் பரமனை" (திருவாச.446)

     (3) ஸிப்.

     இது உடன்பிறப்பைக் குறிக்கும் மேலையாரியத் தியூத்தானியச்
சொல். ஆக்கசுப் போர்டு சிற்றகர முதலியில் (C.O.D.) பின்வருமாறு
குறிக்கப்பெற்றுள்ளது :

     sib = a brother or sister. sibship = the group of children
from the same two parents.

     OE.sib (b), MDu. sib (be), OHG, sippi, Goth. sibjis.

     இம் மூவகை மூலத்தினும் தமிழ்மூலமே பொருத்தமா யிருத்தல்
காண்க.

அளகம் - அலக

     அள்=செறிவு. அள்ளுதல்=செறிதல். அள்ளல் = நெருக்கம்.

     அளம் = செறிவு. அளம் - அளகம் = 1. பெண்மயிர் (பிங்.),

     செறிந்த கூந்தல். 2. மயிர்க் குழற்சி (பிங்.).

அளி - அலி

     அள் = கூர்மை, நீர்முள்ளி. அள் - அளகம் = பன்றிமுள்.

     அள் - அளி = கொட்டும் முள்ளுள்ளது, தேனீ.

அள் - அல (முள்)

     ஒ.நோ: நுள் - நள் - நள்ளி = நண்டு. நள்-நளி = தேள்.

     வடமொழியில் அலி என்னுஞ் சொல் தேளையுங் குறிக்கும்.