|
அனல் - அனல
அன்
- அன்று. அன்றுதல் = சினத்தல். அன்று - கன்று.
கன்றுதல்
= சினத்தல், வெயிலாற் கருகுதல்.
அன்
- அனல் - கனல் = நெருப்பு. கனலி = கதிரவன்.
அனல்
- தீ, வெப்பம், இடி. அனலுதல் = அழலுதல்.
அனலி
= நெருப்பு, கதிரவன்.
அழல்,
அன்று, அனல் என்னும் சொற்களின் மூலம் அல் என்பது
உய்த்துணரப்படும். அது வழக்கற்றது. அது எல் என்னும் சொல்லொடு
தொடர்புள்ளது. எல் = கதிரவன், வெயில், ஒளி, பகல்.
வடமொழியில்
அன் என்பதை மூலமாகக் காட்டுவர். அதற்கு
உயிர்த்தல், இயங்குதல் என்னும் பொருளே உண்டு.
ஆகவம் - ஆஹவ
(இ. வே.)
அகவுதல்
= அழைத்தல், போருக்கழைத்தல், அறைகூவல்.
அகவு
- அகவம் - ஆகவம் = போர்.
வடவர்
ஆ - ஹ்வே என்று மூலங்காட்டுவர். ஹ்வே என்பது
அகவு என்பதன் திரிபென்பது முன்னரே கூறப்பட்டது.
ஆ
என்பது பொருளற்ற முன்னொட்டு.
ஆடு - (ஏடு)
ஏட
முழுத்தல்
= திரளுதல். முழு - முழா = திரண்ட முரசு. முழா - முழவு - முழவம்.
முழா
- மிழா = திரண்ட ஆண்மான்.
ஒ.நோ:
முடுக்கு-மிடுக்கு, முண்டு - மிண்டு, முறை - மிறை= வளைவு.
மிழா-
மேழம் = திரண்ட செம்மறிக்கடா.
மேழம்
- மேழகம் = செம்மறிக்கடா.
| "வெம்பரி
மேழக மேற்றி" |
(சீவக.
522) |
மேழம்
- மேடம் = செம்மறிக்கடா, மேடவோரை (பிங்.).
மேழகம் - மேடகம் = செம்மறிக்கடா, மேடவோரை.
மேழகம் - ஏழகம் = செம்மறிக்கடா, ஆடு (சூடா.)
ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு = ஆடு.
| "யாடுங்
குதிரையும் நவ்வியும் உழையும்" |
(தொல். 1511)
|
|