|
ஆம்1-ஆம்
ஆ-ஆகு-ஆகும்-ஆம்
(yes). ம. ஆம், தெ. அவுனு
'ஆம்'
வடமொழியில் மூலமில்லா உடன்பாட்டிடைச் சொல்.
ஆம்2-ஆப்
ம்-ஆம்-நீர்.
"ஆமிழி யணிமலை" (கலித். 48).
ஆமணக்கு-ஆமண்ட
"ஆமணக்கு
நட்டால் ஆச்சா வாகுமா?" என்பது பழமொழி. சிற்றாமணக்கு, காட்டாமணக்கு (ஆதளை) என்பன
ஆமணக்கு வகைகள்.
வடசொல்
அமண்ட, மண்ட என்னும் வடிவுங் கொள்ளும்.
ஆயம்-ஆய (இ. வே.)
தாயம்-ஆயம்
= உரிமை, கடமை, கடத்தக்கூலி, தாய ஆட்டக்காய் தாய எண் அல்லது பணையம்.
"உருளாயம்
ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்" |
(குறள். 933)
|
|
|
| "ஆயத்திற்
கஞ்சி ஆற்றில் நீந்தினதுபோல்" |
|
என்பது பழமொழி.
இருக்கு
வேதத்தில் ஆய என்னும் சொல் வந்துசேர்கை என்னும்
பொருளில் ஆளப்பட்டுள்ளது (II,38 : 20). பாணினீயம், மனுஸ்மிருதி,
மகாபாரதம் முதலிய பின்னூல்கள் வருவாய், வரி, ஊதியம் முதலிய
பொருள்களில் அதை ஆள்கின்றன. ஆய என்னும் சொற்கு ஆ-இ
என்னும் மூலங் காட்டுவர். இ என்பது இய் என்னும் தென்சொல்லின்
சிதைவாம். இய் - இயல், இயங்கு.
இனி,
ஆம் என்னும் சொற்கு வருவாய் என்று பொருள்
கொள்ளினும், ஆ என்னும் அதன் முதனிலையை வா என்பதன் திரிபாகக்
கொள்க.
ஆயிரம் - ஸகஸ்ர
(இ.வே.)
அயிர்
= நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்.
ஆற்று
மணலும் கடற்கரை மணலும் ஏராளமா யிருப்பதால்,
மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.
| "வாழிய...நன்னீர்ப்
பஃறுளி மணலினும் பலவே" |
(புறம். 9)
|
|