பக்கம் எண் :

மொழியதிகாரம்83

"நீநீடு வாழிய...வடுவாழ் எக்கர் மணலினும் பலவே"
(புறம். 55)

     ம.ஆயிரம், கு.ஆயிரெ, க.சாவிர, து.சாவிர, துட.சோவெர்(க),

     கோ. சாவ்ர்ம்.

     இ. ஹசார் (hazƒr), பெ. ஹ

சார் (hazƒr), கி. khilloi for khesoi.

     வடமொழியில் மூலமில்லை. அகரமுதல் சகர முதலாய்த் திரிவதும்
யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம்
என்பது சாவிர எனத் திரிந்தது.

     ஒ.நோ: இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம்,
ஏண் - சேண், நீயிர் - நீவிர், சேயடி - சேவடி.

     கன்னடச் சொல்லையொட்டியே துளுவச் சொல்லும், கன்னடத்
திரிபான படகச் சொல்லை யொட்டியே துடவச் சொல்லும் கோத்தச்
சொல்லும், இவற்றை யொட்டியே வடசொல்லும், சகர முதலாய்த்
திரிந்துள்ளன. இதை அறியாது, பேரா. பரோ வடசொல்லையே
தென்சொற்கு மூலமாய்த் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப்
பற்றிய தவற்றுக் கருத்தினாலேயே.

ஆர் - அர (இ. வே.)

     ஆர்தல் = பொருந்துதல். ஆர் = சக்கரக் குறட்டிலும்
வட்டையிலும் பொருந்தும் சட்டம் (Spoke radius).

"ஆர்கெழு குறடுசூட் டாழி போன்று"
(சீவக. 828)

     வடமொழியிற் காட்டப்பெறும் வேர் ரு (Ši) என்பதே. அது இரி
என்னும் தென்சொல்லின் திரிபாகும்.

ஆரம் - ஆர

     ஆர் - ஆரம்.

ஆரஞ் சூழ்ந்த அயில்வாய் நேமி"
(சிறுபாண்.252)

ஆர்ப்பாட்டம் - ஆரபாட்ட (bh)

     ஆர்த்தல் = ஆரவாரித்தல். ஆர்ப்பு + ஆட்டம் - ஆர்ப்பாட்டம் =
ஆரவாரம். தெ. ஆர்பாட்டமு (bh).

ஆரம் - ஹார

     ஆர்தல்=பொருந்துதல். ஆர்-ஆரம் = பல மலர்கள் அல்லது

     மணிகள் பொருந்திய மாலை.

     ஒ.நோ : தொடு - தொடை.