"அண்ணலோர்
விருத்தன்போல் வந்தாவண
வோலை காட்டி" |
(கந்தபு.வழிநடை. 12)
|
ஆவணமாக்கள் = உரிமை அல்லது கடமைச் சூள் வாங்குவோர்.
| "பொறிகண்
டழிக்கும் ஆவண மாக்களின்" |
(அகம். 77) |
ஆளத்தி - ஆலப்தி
(ஆ + லப்தி)
ஆலத்தி
- ஆளத்தி = ஒரு பண்ணை வலிவு மெலிவு சமன்
என்னும் முந்நிலையுந் தழுவ மண்டலித்துப் பாடுதல் அல்லது இசைத்தல்.
ஆலத்தி
சுற்றுதல் கட்புலனும், ஆளத்தி சுற்றுதல் செவிப் புலனும்
ஆகும் .
லப்
என்னும் வடசொற்கு, அலப்புதல், பிதற்றுதல், புலம்பல்,
விளித்தல், சொல்லுதல் என்ற பொருள்களே உள. ஆளத்தி என்னும்
தமிழ்ச்சொற் கொப்பாக, ஆ - லப் என்னும் புனைசொல்லினின்று ஆலாப, ஆலாபன முதலிய
சொற்களைத் திரித்திருப்பதாகத் தெரிகின்றது.
இகம் - இஹ (இ.
வே.)
இ
- இகு - இகம் = இவ்வுலகம். இகு - இங்கு - இங்கண்.
முச்சுட்டும்
முதலில் தமிழிலேயே தோன்றினவென்பது பின்னர்
விளக்கப்பெறும்.
இசி - ஹஸ்
இளித்தல்
= பல்லைக் காட்டுதல், சிரித்தல். இளி = சிரிப்பு (பிங்.).
இளி - இசி. இசித்தல் = சிரித்தல்.
ஹாஸ்ய
ரஸ = நகைச்சுவை.
இஞ்சிவேர் - ச்ருங்கவேர
இஞ்சி
என்பது தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைந்து
வரும் மருந்துப் பூண்டு.
"செய்யாப்
பாவை வளர்ந்து
கவின்முற்றிக்காயங் கொண்டன இஞ்சி" |
(மலைபடு.
125-6)
|
|
|
| "இஞ்சிவீ
விராய பைந்தார் பூட்டி" |
(பதிற்.
42 : 10)
|
|
|
"மஞ்சளும்
இஞ்சியும் மயங்கரில் வலயத்து"
|
(சிலப்.
10:74)
|
இஞ்சுதல்
= நீரை உள்ளிழுத்தல். இஞ்சு - இஞ்சி.
இஞ்சி
காய்ந்தாற் சுக்கு. சுக்கு= நீர்வற்றியது.
|