|
இட்டிமை
= சிறுமை (திவா.), ஒடுக்கம் (திருக்கோ. 149,உரை).
இட்டிய
= சிறிய (ஐங். 215). இட்டளம் = நெருக்கம்.
இட்டிடை
= சிறுகிய இடை.
"இட்டிடையின்
மின்னிப் பொலிந்து"
|
(திருவாச.
7 : 16)
|
இட்டிகை
= சிறுசெங்கல்.
"கண்சொரீஇ
இட்டிகை தீற்றுபவர்"
|
(பழ.
108)
|
வடமொழியிற்
செங்கல் என்றே பொதுவாகக் குறிக்கப்பட் டுள்ளது.
அதில் மூலமும் இல்லை.
இடைகலை - இடாகலா
(இடா+கலா)
இடைகலை
= இடப்பக்க மூக்குத் துளைவழி விடும் உயிர்ப்பு,
பத்து நாடிகளுள் ஒன்று.
இடை
= இடம். இடைதல் = பின்வாங்குதல், தோற்றல், வலி
குறைதல். இடை - இடம் = வலிகுறைந்த கைப்பக்கம். இடம் X வலம்.
இடைகலை
இடைநாடி எனவும் படும். இடை - இடா (வ.). நாடி
- நாடீ (வ.)
இடைகழி - தேஹலி
(லீ)
இடை
+ கழி = இடைகழி = இடையிற் கழிந்து செல்லும் நடை,
சந்து, வாயில்.
இடைகழி
- டேகழி - டேழி - ரேழி (கொச்சைத் திரிபுகள்)
டேகழி தேஹலி(வ.)
இராகு - ராஹு
இராகு
கரும்பாம்பு (பிங்.) என்றும் கருங்கோள் என்றும்
சொல்லப்படும்.
இர்-
இரு - இருமை = கருமை. இர்- இரா- இரவு. இர் -
இருள் - இருட்டு. இரா - இராகு.
வடமொழியிற்
பற்றுவது (to seize, take hold of) என்று
பொருள் படும் ரப் (rabh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவது,
பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தியாம்.
இலக்கு - லக்ஷ்
இலக்கு
= இலை, எய்யுங் குறி.
|