பக்கம் எண் :

88வடமொழி வரலாறு

     விற்பயிற்சியிலும் விற்போட்டியிலும், பெரும்பாலும் ஒரு
மரத்துச்சியிலுள்ள இலையை இலக்காக வைத்தெய்வதே பண்டை
வழக்கம். இலக்கு = ஒரு குறித்த இடம் (நெல்லை வழக்கு).

     வடமொழியாளர் லக்ஷ் என்பதை வினையாகவும் ஆள்வர்.

இலக்கம் - லக்ஷ

     இலக்கு - இலக்கம் = குறி.     

"இலக்க முடம்பிடும் பைக்கு"
(குறள். 627)

இலக்கியம் - லக்ஷ்ய

     இலக்கு - இலக்கம் = சிறந்த வாழ்க்கை யிலக்கை விளக்கிக்
கூறும் வனப்பு (காவியம்).

     வடமொழியில் ல ய என்ற சொற்கும் இலக்கான பொருள்
என்றே பொருள் கூறுவர்.

இலக்கணம் - லக்ஷண

     இலக்கு - இலக்கணம் = சிறந்த நடைக்கு எடுத்துக்காட்டாக
அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காக, கூறப்பெறும் மொழி யமைதி
(Grammer).

     வடமொழியில் குறி, குறிக்கோள், இயல், இயல்விளக்கம் (definition),
விளக்கிக் காட்டு (illustration) என்னும் பொருள்களிலேயே ல ண
என்னும் சொல்லை ஆள்வர்.

     ல என்னும் சொற்கு லக் (lag = that which is attached or
fixed) என்பதை மூலமாகக் காட்ட முயல்வது பொருந்தாது.

ஈந்து - ஹிந்தால

     ஈர்தல் = அறுத்தல்.

"உயிரீரும் வாளது" (குறள்.334).

     ஈர் - நுண்மை.

"ஈரயிர் மருங்கின்" (சிலப். 6 : 146).

     ஈர்-ஈர்ந்து-ஈந்து = கிளையில்லா மரங்கட்குள் மிகச் சிறிய
ஓலையுள்ளது, அல்லது ஏறுவாரை அறுக்கும் அடியினது.

     ம. ஈத்த, தெ. ஈத்த.

ஈயம் - ஸீஸ (வே.)

     இள் - இள - இளகு. இள் - இய் - ஈ - ஈயம் = எளிதில்
இளகுவது.

உகு - உக்ஷ்(இ. வே.)

     உகுத்தல் = சிந்துதல், சிதறுதல், தெளித்தல்.