|
உகை - அஜ்
உ
- உகை. உகைத்தல் = முன்தள்ளுதல், செலுத்துதல்.
உகை
- அகை. அகைத்தல் = செலுத்துதல் (சூடா.)
| "பெருந்தோணி
பற்றி யுகைத்தலும்" |
(திருவாச.
30:4)
|
அகை
- கை. கைத்தல் = செலுத்துதல்.
அகை
- Gk. ago, L. ago, Skt. aj.
உச்சம் - உச்ச
உ
- உச்சி = தலை, உச்சந்தலை, முகட்டு நுனி, வானமுகடு, நண்பகல்.
உச்சி
- உச்சம். உச்சம்போது = உச்சிப்பொழுது.
| "உச்சம்
போதே ஊரூர் திரிய" |
(தேவா.
289 : 9)
|
உச்சந்தலை
- உச்சித்தலை.
உடுக்கு - ஹு டுக்க
உடு
= ஒடு. உடுக்கு = ஒடுக்கு. ஒடு - ஒடுகு - ஒடுங்கு -
ஒடுக்கு - ஒடுக்கம். உடுகு, உடுங்கு, ஒடுகு என்பன இறந்துபட்டன.
உடுக்கு
= இடையொடுங்கிய சிறுபறை. உடுக்கு - உடுக்கை.
வடமொழியில் மூலமில்லை.
உண்ணம் - உஷ்ண
(இ.வே.)
உள்
- உண் - உண்ணம் = வெப்பம்.
| "உண்ண
வண்ணத் தொளிநஞ்ச முண்டு" |
(தேவா. 510 : 6)
|
உண்
= உண. உணத்தல் = காய்தல், உலர்தல்.
உண
- உணத்து. உணத்துதல் = காயப்போடுதல், உலர்த்துதல்.
தலையை
(முடியை) உணத்துதல் என்பது நெல்லைநாட்டு வழக்கு.
மிளகாய்
வற்றலை உணந்த மிளகாய் என்பது மேலை
வடார்க்காட்டு வழக்கு.
உண
- உணங்கு. உணங்குதல் = உலர்தல்.
| "தினைவிளைத்தார்
முற்றந் தினையுணங்கும்" |
(தமிழ்நா.
154)
|
உணங்கல்
= உலர்ந்த கூலம், வற்றல். உணங்கு - உணக்கம்.
|