பக்கம் எண் :

96வடமொழி வரலாறு

     இங்ஙனமிருந்தும், சூசி என்பதினின்று ஊசி என்பது திரிந்துள்ளதாக,
பிராமணத் தமிழ்ப்பண்டிதர் சென்னைப் ப. க. க. த, அகரமுதலியிற்
காட்டியிருப்பது எத்துணை நெஞ்சழுத்தம்!

ஊதை - வாதை (இ. வே.)

     ஊ - ஊது - ஊதை = 1. காற்று (திவா.) 2. வாடைக்காற்று,

     "பனிப்புலர் பாடி...... ஊதை யூர்தர" (பரிபா. 11: 84).

     3. வளி(வாத) நோய்.

     "தலைவலி பன்னமைச்ச லூதை" (தைலவ. தைல. 7).

     வடமொழியார் வா (blow) என்பதை மூலமாகக் கொள்வர்.
அது ஊ என்பதன் திரிபே.

ஊர் - ரோஹ் (இ. வே.)

     உர் - உறு - உறி = உயரத் தொங்கவிடும் தூக்கு.

     உறு - உறை = உயரம் (பிங்.).

     உர் - ஊர். ஊர்தல் = 1. ஏறுதல். "ஊர்பிழிபு.....வந்தன்று"

     (ஐங். 101). 2. ஏறிச்செல்லுதல்.

"சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான்"
(குறள். 37)

     வடமொழியார் காட்டும் ருஹ் (to ascend) என்னும் மூலம் ஊர்
என்பதின் முறைமாற்றுத் திரிபே (metathesis).

     ஊர்-ஊர்த்தம். ஒ.நோ: நேர் - நேர்த்தம். ஊர்த்தம் - ஊர்த்வ
(urdhva) உயர்ந்த, தூக்கிய (இ. வே.).

எருமை - ஹெரம்ப

     இர் - இரு - இருமை = கருமை. இருமை - எருமை = கரிய
மாட்டினம்.

     ம. எரும, து. எர்மெ, தெ. எனுமு, க, எம்மெ.

எல்லரி - ஜல்லரீ (jh)

     எல்லரி = பறைவகை. "வல்வா யெல்லரி" (மலைபடு. 10).

ஏது - ஹேது

     ஏ - ஏவு - ஏசு - ஏது.

     ஏசுதல் - ஏவுதல், செலுத்துதல்.

"கொல்லம் பேசி"
(தேவா. 380 : 6)

     ஏது = ஏவுகை. தூண்டுகை, காரணம்.