|
ஒட்டகம் - உஷ்ட்ரக
ஒட்டுதல்
= வயிறு உள்ளொடுங்குதல். ஒட்டப்போடுதல்
பட்டினியிருக்கச் செய்தல். ஒட்டு - ஒட்டகம் - நீண்ட நாள்
உண்ணாதிருக்கக் கூடிய விலங்கு.
"ஒட்டகம்
குதிரை கழுதை மரைஇவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய" |
(தொல்.
1552)
|
வடவர்
வெப்பத்தைக் குறிக்கும் உஷ் என்னும் அடிச் சொல்லை
மூலமாகக் காட்டுவர். ஒட்டகம் சுடுகின்ற பாலை நிலத்திற்குரிய தாயினும்,
அதன் வடசொற் பெயர் தென்சொல்லை ஒத்திருந்ததால், அதினின்றே
திரிந்திருத்தல் வேண்டும்.
மேலும்,
உஷ் என்னும் வடசொல்லும் உள் என்னும் தென்
சொல்லின் திரிபே. இது முன்னர் விளக்கப்பெற்றது.
ஒட்டகம்
- ஒட்டகை. ம. ஒட்டகம், க., தெ., து. ஒண்டெ.
ஓடம் - ஹோட
ஓ டு
- ஓடம். ம. ஓடம், க., தெ., து. ஓட.
வடவர்
காட்டும் ஹோட் (hod) ,ஹௌட் (haud) என்னும் மூலங்கள்
இயங்கு என்னும் பொருனவே.
ஓடு - ஹோட் (hod)
ம.,
க., தெ., து. ஓடு.
வடசொல்
ஹூட், ஹ்ரூட், ஹூட், ஹோட், ஹௌட் எனப் பல
வடிவங்கொள்ளும்.
ஓம்1
- ஓம்
ஆம்
- ஓம் (yes)
துரத்தல்,
தூண்டுதல், விரும்புதல், பொந்திகைப்படுதல், காத்தல்,
ஆள்தல் முதலிய பல பொருள்களில் ஆளப்பெறும் அவ் என்னும்
சொல்லை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது.
ஓம்2
- ஓம்
ஓ
- ஓம்.
இதன்
விளக்கத்தை என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட் காண்க.
அ
+ உ + ம் என்று பிரித்து, இவற்றைத் திருமால் சிவன் பிரமன்
என்னும் முத்திருமேனியரைக் குறிப்பதாகக் கூறும் வடநூல் வழக்கு,
உண்மைக்கு முற்றும் மாறானதாம்.
|