பக்கம் எண் :

98வடமொழி வரலாறு

     "ஏமுற இனிதி னோம்பி" (கம்பரா. விபீட. 114).

     ஏம் + உறு = ஏமுறு. ஏமுறுதல் = காப்படைதல்.

     ஏம் - ஏமை - யாமை = பாதுகாப்பான ஓடுள்ள ஊருயிரி.

 "யாமை யெடுத்து நிறுத்தற்றால்"
(கலித். 94)

     யாமை - ஆமை. ஒ.நோ: யானை - ஆனை.

     ஏம் + மரு = ஏமரு. ஏமருதல் = காக்கப்படுதல்.

 "இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்"
(குறள். 448)

     ஏம் - ஏமா. ஏமாத்தல் = அரணாதல்.     

"இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே"
(பழ. 306)
   
"எழுமையு மேமாப் புடைத்து"
(குறள். 126)

     ஏம் = ஆர் = ஏமார். ஏமார்த்தல் = வலுப்படுத்தல்.

"சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல்"
(குறள். 660)

     ஏம் + மாறு = ஏமாறு. ஏமாறுதல் = காப்பழிதல், வஞ்சிக்கப்படுதல்.
     ஏமாறு - ஏமாற்று (பி. வி.)

     ஏம்-ஏமம்: 1.காப்பு, பாதுகாப்பு. "ஏமப் பேரூர்" (தொல்.983).

     2. காவல்.

     "எல்லா வுயிர்க்கும் ஏம மாகிய" (புறம். 1: 11).

     "ஏம முரசம் இழுமென முழங்க" (புறம். 3: 3).

     3. வைப்புச் சொத்து (திவா.).

     4. பாதுகாப்பான இராக்காலம், நள்ளிரவு, இரா.

     "புறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே" (தேவா. 965:7).

     5. இன்பம் (திவா.).

     ஏமம் - சேமம். ஒ.நோ : ஏண் - சேண்.

     சேமம்-பாதுகாப்பு, நலம், இன்பம், நல்வாழ்வு, அரண், சிறைச் சாலை,
     புதைபொருள், சுவடிக்கட்டு, கவசம், சவக்காப்பு.

சேமம் - க்ஷேம (இ.வே.)

     தங்குதலை அல்லது குடியிருத்தலைக் குறிக்கும் க்ஷி என்னும்
முதனிலையை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாமை காண்க.

ஏலம் - ஏலா