(3)
|
சொற்றிரிப்பு.
எ-டு: அப்பம்-அபூப, பேசு-பாஷ்.
|
|
|
(4) |
எழுத்துக்
குறைப்பு. எ-டு: மண்டலம்-மண்டல.
|
|
|
(5) |
எழுத்துச்
சேர்ப்பு. எ-டு: மயிர்-மசிர்-ச்மச்ரு (வ.). |
|
|
(6)
|
முன்னொட்டுச்
சேர்ப்பு. எ-டு: காயம் - ஆகாச, ஆயிரம்
ஸகஸ்ர.
|
|
|
(7) |
பின்னொட்டுச்
சேர்ப்பு:
எ-டு:-தாமரை-தாமரஸ (எழுத்து)
சதுரம்-சதுரஸ்ய (அசை)
வடவை-வடவாமுக (சொல்)
|
|
|
(8) |
இடைச்செருகல்.
எ-டு: திடம்-த்ருட, மெது-ம்ருது, சொம்-
ஸ்வாம் |
|
|
|
(9)
முறைமாற்று (Metatheiss).
எ-டு: கதவம்-கபாடம்.
|
|
|
(10) |
தவற்று
மூலம்
1. பொருள் மாற்று. எ-டு: இஞ்சிவேர்-ச்ருங்கவேர,
முத்தம்-முக்தா.
2. தவற்றுப் பிரிப்பு. எ-டு: குமரன்-கு+மார, சுவணம் ஸு +பர்ண
|
|
|
(11) |
இடுகுறியெனல். |
|
|
(12)
|
தேவமொழியெனல்.
|
|
|
(13) |
கதை
கட்டல். எ-டு: சொலவம்-ச்லோக. சோக-ச்லோக (கதை)
|
வான்மீகி
ஒரு வேடனாற் கொல்லப்பட்ட பறவையைக் கண்டு
துயருற்றபோது முதற்செய்யுளை யியற்றியதினால், செய்யுள் சுலோகம்
எனப் பெயர் பெற்றதென்பது கதை கட்டல்.
தமிழிலும்
திரவிடத்திலுமுள்ள சுட்டுச் சொற்கள், ஆ (அ), ஈ
(இ), ஊ (உ) என்னும் மூன்று சுட்டொலிகளும் அவற்றின் வளர்ச்சியுமாகும்.
சுட்டொலிகள் மூன்றும் கைச்சுட்டை யொத்த வாய்ச் சுட்டொலிகளாகத்
தோன்றியவை. வாய்ச்சுட்டாகத் தோன்றக்கூடிய ஒலிகள் ஆ ஈ ஊ என்னும்
மூன்றே. வாயை விரிவாய்த் திறப்பதால் சேய்மைச் சுட்டாகிய ஆகாரமும்,
வாய்மூடியாகிய உதட்டைப் பின்னுக்கிழுப்பதால் அண்மைச் சுட்டாகிய
ஈகாரமும், அதை முன்னுக்குக் குவிப்பதால் முன்மைச் சுட்டாகிய ஊகாரமும்,
பிறக்கின்றன.
|