பக்கம் எண் :

இலக்கணவதிகாரம்137

     சமற்கிருத வினைமுற்றீறுகள், தற்பொருட்டுவினை (ஆத்மனே பத)
ஈறுகள் என்றும் , மற்பொருட்டுவினை (பரஸ்மைபத) ஈறுகள் என்றும்
இருவகைப்பட்டுள்ளன. சில வினைகள் தற்பொருட்டு வினையீறுகளையும்,
சில வினைகள் மற்பொருட்டு வினையீறு களையும்,சில வினைகள்
இரண்டையும் ஏற்கும். முன்னொட்டுச் சேர்க்கையால், த.பொ.வினை
ம.பொ.வினையாகவும், ம.பொ.வினை த. பொ.வினையாகவும் மாறுவதுண்டு.

     த.பொ. வினைப்பயன் செய்வானையும், ம.பொ. வினைப் பயன்
பிறனையுஞ் சாரும்.

     எ-டு:

     தேவதத்த: யஜதே (வ) .= தேவதத்தன் தனக்கு வேட்கிறான்.

     தேவதத்த: யஜதி(t) = தேவதத்தன் பிறனுக்கு வேட்கிறான்.
வேட்டல் = வேள்வி செய்தல்.

     எல்லா வினைகளும் பத்து லக்கரங்களிலும் மூவிடத்தும்
மூவெண்ணிலும் புடைபெயரும்.

     நிகழ்காலம் , இன்றலா இறந்தகாலம், ஏவல்வினை, ஆற்றல்
வினை ஆகிய நாலிலக்கரங்களிலும், வினைகள் சில வேறுபாடடை
கின்றன. அவ் வேறுபாடு விகரண(ம்) எனப்படும். வேறுபாட்டை யும்
லக்கரங்கள் ஸார்வ தாதுக என்றும், வேறுபாடடையா லக்கரங்கள்
அர்த்த தாதுக என்றும் சொல்லப்படும்.

     விகரணம்பற்றி வினைகள் பத்துக் கணங்களாக
வகுக்கப்பட்டிருக்கின்றன. இப் பத்துக் கணங்களும் மீண்டும் இரு
தொகுதி களாகப் பகுக்கப்பட்டுள. முதலாம் இரண்டாம் மூன்றாம் பத்தாங்
கணங்கள் முதல் தொகுதியும், ஏனைய இரண்டாம் தொகுதியும் ஆகும்.
முதல் தொகுதி வினையடிகள் அகரத்தில் இற்று என்றுந் திரியாது நிற்கும்;
இரண்டாந் தொகுதி வினையடிகள் அகரத்தில் இறாது திரிந்துவரும்.

     வடமொழிச் செயப்பாட் டிறந்தகால வினையெச்ச வீறாகிய 'த',
தமிழிறந்தகால வினையெச்ச வீறாகிய துவ்வை ஒருபுடை யொத்தது.

     வடமொழி எதிர்மறை யேவலசையாக வரும் 'மா', வத்து என்னும்
தெலுங்குச் சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. கூடாது என்னும் எதிர்மறை
யாற்றல்வினை விலக்குப் பொருளையும் உணர்த்தும். நீ போகக்கூடாது = நீ
போகாதே, நீ போகவேண்டா.

     ஒல்லும் = கூடும். ஒல்லாது = கூடாது.

     ஒல்லாது-(தெ.) ஒத்து (வேண்டா)-வத்து-(இ.) மத்.