பக்கம் எண் :

136வடமொழி வரலாறு

     வினையீறுகளை யெல்லாம் பொதுப்படக் குறிக்கும் பாணினீயக்
குறியீடு.

     சமற்கிருத வினைகள், ஆறுகாலங்களும் (Tenses), நான்கு
படிசுகளும் (Moods), மூன்று உறவுகளும் (Voices) கொள்ளும். காலம்
கால என்றும், படிசு அர்த்த என்றும், உறவு ப்ரயோக என்றும்
பெயர் பெறும்.

     ஆறுகாலங்களும் நான்கு படிசுகளும் லக்கரங்கள் எனப்படும்.
வடமொழியில் எல்லா வினைவகைகட்கும் இடுகுறியான குறியீ டுண்டு.

அறுகாலம்

 

காலவகை வடமொழிப்பெயர் வடமொழிக் குறியீடு
     
நிகழ்காலம் வர்த்தமான: லட்(t)
     
இறந்தகாலம்
     
இன்றலா இ.கா. அனத்யதனபூத: லங்
     
சேய்மை ‘’ பரோக்ஷபூத: லிட்(t)
     
வரையிலா ‘’ பூத: லுங்
     
எதிர்காலம்    
     
முதல் எ.கா. பவிஷ்யன் லுட்
     
2ஆம் எ.கா. அனத்யதன பவிஷ்யன் லுட்

 

நாற்படிசு

 

தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் வடமொழிக் குறியீடு
     
ஏவல் வினை ஆஜ்ஞா லோட் (t)
     
ஆற்றல் வினை விதி லிங்
     
வாழ்த்துவினை ஆசீ: ஆசீர்லிங்
     
நிலைப்பாட்டுவினை ஸங்கேத லுங்

     லேட்(t) என்று ஓர் இணைப்புப் படிசு (Subjunctive mood)
வேதமொழியி லிருப்பதாகவும், பின்பு வழக்கற்றுப் போனதாகவுஞ்
சொல்லப்படும்.

மூவுறவு

 

தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் எடுத்துக்காட்டு
     
செய்வினை கர்த்தரிப்ரயோக ராம:ஸத்யம் பாஷதே.
     
செயப்பாட்டுவினை கர்மணிப்ரயோக ஹரிணா பலம் ப யதே.
     
தன்பாட்டுவினை பாவேப்ரயோக ராமேண கம்யதே.