பக்கம் எண் :

இலக்கணவதிகாரம்139

     கரைதல் = 1. அழைத்தல். "கலங்கரை விளக்கம்" (சிலப்.6:14).

     2. சொல்லுதல், கற்பித்தல்.

     "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய" (தொல். சி. பா.).

     3. எடுத்துச் சொல்லுதல், புகழ்தல்.

     அழைத்தலைக் குறிக்கும் அகவல் என்னும் சொற்போல், கரைதல்
என்னும் சொல்லும் பாடுதலை உணர்த்தும். ஆதலால், வடமொழியிற்
பாணனை அல்லது பாவலனைக் காரு (இ. வே.) என்பர்.

ஜ்ரு

     கிழம்-Gk. கெரோன் (gern) - வ. ஜரா.

     ஜ்ரு என்பது செயற்கை வேர். அதற்குக் கிழமாகு என்னும்
பொருள் பொருந்தாது.

மந்த்ர்

     முன்னுதல் = கருதுதல், எண்ணுதல், சூழ்தல். முன்-மன்+திரம் (திறம்)
= மந்திரம் ஒ. நோ: மன்+து = மன்று-மந்து-மந்தை.

     மந்திரம்- மந்த்ர (வ.). மந்த்ர என்னும் வடிவினின்று மந்த்ர்
என்றொரு செயற்கைச் சொல்லை யமைத்து, அதை முதனிலை யாகவோ
வேராகவோ காட்டுவது, எத்துணை நகைப்பிற்கிட மானது! அது, உசாவு
அல்லது சூழ் என்னும் பொருளை எங்ஙன் ஏற்கும்?

வருத்

     வள்-வட்டு(வள்+து)-வட்டம்-வ்ருத்த(வ.). L. verto (to turn).

     ஒ. நோ: நட்டம்-(நடம்)-ந்ருத்த (வ.).

     வ்ருத்த என்னும் திரிசொல்லினின்று, வ்ருத் என்னும் பகுதியை
வெட்டி, அதை வேராகக் காட்டுவது எத்துணைச் செயற்கை முறை!
இங்ஙனம் எத்தனையோ தமிழ்த் தொழிற்பெயர்கள் ஆரிய மொழி களின்
முதனிலையாகவும் வேராகவும் காட்டவும் ஆளவும் பெறுகின்றன
என அறிக.

வேப்

     விது-விதிர்-விதிர்ப்பு = நடுக்கம்.

"அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்."
(தொல். 799)

     விதிர்ப்பு-வேப் (வ.) = நடுங்கு. வேப் - வேபன = அதிர்ச்சி.