பக்கம் எண் :

168வடமொழி வரலாறு

     தமிழில் முறையே, அந்தி, ஆயிரம், கண்ணகி, தூணம்,
தி(பெண்பாலீறு), துழாய், உலகு, பார்ப்பான், தோணி, நேஎம், தேஎம்
முதலியனவாகத் திரிந்துள்ளவென்றும், விஷ்ணு, குமார, துர்கா என்னும்
ஆரியத் தெய்வங்களே மாயோன், முருகன், கொற்றவை யெனத் தமிழ்த்
தெய்வங்களாக மாறியுள்ளன வென்றும், திருவள்ளுவரின் முப்பால் ஆரியத்
திரிவர்க்கமே யென்றும், அ. ம. ப. க. க. மொழிநூல் துறைத்
தொடக்கவிழாத் தலைமையுரையிற் கூறியுள்ளார்.

     இவற்றையெல்லாங் கவனித்துக் கண்டியாது, பொருளீட்டுந் தம்
பாட்டையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இற்றைத் தலைமைத் தமிழ்ப்
பேராசிரியர்.

"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்."
(குறள். 1072)

     இன்று தமிழைக் கெடுப்பவர், தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும்
அரசியற் கட்சித் தலைவருமாகிய இரு சாராரே.