நடனம்-நடன ()
நடி-நடிகன்,
நடிகை.
நடிகன்-நடிக (),
நடிகை-நடிகா ()
நட்டம்-நட்டணம்,
நட்டணை.
நட்டணம்-நர்த்தன
நாகம்-நாக (g)
நகர்-நாகம்
= பாம்பு. நகர்தல் = ஊர்ந்து செல்லுதல்.
ஒ.
நோ: E.snake, F. snican, to creep.
வடவர்
நக (மலை) என்னுஞ் சொல்லைக் காட்டி, மலையி லுள்ள
தென்று பொருட்காரணங் கூறுவர்.
நாகரிகம்-நாகரிக
நகரம்-நகரகம்-நாகரிகம்.
நாடகம்-நாடக ()
நடி+அகம்
= நாடகம்.
நாளம்-நால
நுள்-நள்-நாள்-நாளம்
= உட்டுளையுள்ள தண்டு.
நாணல்-நாட
நாளம்-நாணம்-நாணல்
= உட்டுளையுள்ள தட்டை.
நாடி-நாடி
நாள்-நாளி-நாழி-நாடி = அரத்த அல்லது மூச்சுக்குழாய், ஊதை
(வாத) பித்துக் கோழை நாடி, நாடித்துடிப்பு.
நாலா-நானா
அந்தணர்,
அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால் வகுப்பையும்
சேர்ந்த எல்லா மக்களும் வந்திருந்தனர் என்பதை, நாலா பேரும்
வந்திருந்தனர் என்றும்; நாற்றிசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர்
என்பதை, நாலா திசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்றும்;
கூறுவது மரபு.
நாலா
= நால்வகை, எல்லா, பலவகை.
|